Top posting users this month
No user |
சிறுகிழங்கு பொரியல்
Page 1 of 1
சிறுகிழங்கு பொரியல்
தேவையான பொருள்கள்:
சிறு கிழங்கு – அரை கிலோ
வெங்காயம் – 2 பெரியது
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
சீரகம் – அரைஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 இணுக்கு
உப்பு – தேவைக்கு
செய்முறை:
சிறு கிழங்கை மண், அழுக்கு போக கழுவி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு தோல் நீக்கி பொடியாக கட் செய்து ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரிலேயே போடவும். வெங்காயம் கட் செய்து கொள்ளவும்.
அதனுடன் உப்பு சேர்த்து வேகவைக்கவும். பக்குவமாக வெந்தவுடன் தண்ணீர் வடிகட்டி வைக்கவும். சீரகம், மிளகாய், பூண்டை மிக்ஸியில் சுற்றி, தேங்காய் துருவலாக இருந்தால் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் 2 பல் செய்தால் போதும். பூந்துருவலாக வந்துவிடும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு வெடித்தவுடன் வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும், ரெடி செய்த தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அதனுடன் வேகவைத்த சிறு கிழங்கை சேர்க்கவும். சிறிது அடுப்பை சிம்மில் வைத்தால் பொரியல் ஆகிவிடும்.
உதிரி உதிரியாக பார்க்க அழகாக இருக்கும். மல்லி இலை விரும்பினால் கட் செய்து தூவி இறக்கவும்.
ருசியான சிறு கிழங்கு பொரியல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum