Top posting users this month
No user |
அவரைக்காய் பொரியல்
Page 1 of 1
அவரைக்காய் பொரியல்
தேவையான பொருள்கள்:
அவரைக்காய் = கால் கிலோ
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 3
தேங்காய் = கால் மூடி
கசகசா = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 1
சோம்பு = அரை ஸ்பூன்
பட்டை = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
அவரைக்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொண்டு கசகசாவோடு சேர்த்து கர கரப்பாக அரைக்கவும்.
வாணலியில் சோம்பு, பட்டை, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும். மிளகாய் வற்றல் நீள வற்றலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
அடுத்து வெங்காயம் , பச்சை மிளகாய் வதக்கவும். வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அரைத்த தேங்காயையும், உப்பையும் சேர்த்து மீண்டும் சிறிது வதக்கி அரை கப் நீர் விட்டு மூடி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து திறக்கும் போது காய் வெந்து இருக்கும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான அவரைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தியோடு பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum