Top posting users this month
No user |
Similar topics
பீன்ஸ் தக்காளி கறி
Page 1 of 1
பீன்ஸ் தக்காளி கறி
தேவையான பொருள்கள்:
பீன்ஸ் = அரை கிலோ
தக்காளி = கால் கிலோ
வெங்காயம் = 2
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = அரை ஸ்பூன்
இஞ்சி = சிறிது
பூண்டு = 5 பல்
பட்டை = 2
சோம்பு = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸை ஆய்ந்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை தோல் சீவி தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்த பின் வெங்காயம் வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். இரண்டும் வதங்கியதும் இஞ்சி பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இவை எல்லாம் சேர்த்து வதங்கியதும் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து வதக்கவும்.இவையும் வதங்கி பொடி வாசனை அடங்கியதும் நறுக்கிய பீன்ஸை சேர்த்து உப்பையும் போட்டுக் கொண்டு சிறிது வதக்கவும்.
வதக்கியதும் தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து மூடி 8 நிமிடம் வேக விடவும். இடையே இரு முறை கிளறி விடவும்.
கடைசியாக எண்ணெயில் சிறிது தட்டிய பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான பீன்ஸ் தக்காளி கறி தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, நூடுல்ஸ், கட்லெட், சமோசா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
பீன்ஸில் வைட்டமின்கள் A மற்றும் C, ஊட்டச்சத்து அதிக அளவில் இருப்பதால் இதய நோய், நீரிழிவு, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இந்த பீன்ஸ் தக்காளி கறி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum