Top posting users this month
No user |
Similar topics
கீரை வறுத்து அரைத்த கறி
Page 1 of 1
கீரை வறுத்து அரைத்த கறி
தேவையான பொருள்கள்:
அரைக்கீரை = 1 கட்டு
துவரம் பருப்பு = 100 கிராம்
மிளகாய் வற்றல் = 1
கடலை பருப்பு = 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
பெருங்காயம் = சிறிது
தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
தனியா = 1 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
அரைக்கீரை ஆய்ந்து நறுக்கவும். துவரம் பருப்பை வேக விட்டு அரைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், பெருங்காயம், தனியாவை சேர்த்து மணம் வரும் வரை வறுக்கவும். தீய்ந்து விடாமல் கவனமாக வறுக்க வேண்டும்.
அடுத்து இதனோடு கடலை பருப்பையும், உளுத்தம் பருப்பையும் சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவலையும் சேர்த்து வறுக்கவும்.
வறுத்தது எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டுக் கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொண்டு அதனோடு கீரையை சேர்த்து சிறிது உப்பும் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சேர்ப்பதானால் இப்போது பொடியாக நறுக்கி சேர்க்கவும். கீரை சிறிது வதங்கியதும் அரைத்த மசாலாவைக் கலந்து கிளறி மூடவும். 3 நிமிடம் வெந்தால் போதும். இடையில் ஒரு முறை கிளறி விடவும்.
சுவையான கீரை வறுத்து அரைத்த கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
அரைக்கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் மஞ்சள் காமாலை, புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum