Top posting users this month
No user |
Similar topics
மலாய் கோஃப்தா
Page 1 of 1
மலாய் கோஃப்தா
தேவையான பொருட்கள்
பனீர் - 1 கப்
வேகவைத்த உருளைகிழங்கு - 2 [மீடியம் சைஸ்]
துருவிய கேரட்,பட்டாணி,பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 [பெரிய சைஸ் வெங்காயம்]
பொடியாக நறுக்கிய தக்காளி - 3
[தக்காளி,வெங்காயம் இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும்]
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை
மலாய் [கெட்டியான பால்] - 1/2 கப்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/2 ஸ்பூன்
பொடித்த முந்திரி - 2 ஸ்பூன்
கார்ன் மாவு [corn flour] (அ) மைதா மாவு - 2 ஸ்பூன்
உப்பு,சமையல் எண்ணெய்
செய்முறை:
கோஃப்தா: உருளைக் கிழங்கை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்..மற்ற காய்கறிகளை வேகவைத்து சுத்தமாக நீரில்லாமல் வடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த கிழங்கு,காய்கறிகள்,பனீர், பச்சை மிளகாய்,ஒரு ஸ்பூன் மல்லித் தூள்,அரை ஸ்பூன் சீரகத் தூள்,ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு, சிறிது மல்லி இலை, ஒரு ஸ்பூன் பொடித்த முந்திரி அனைத்தையும் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்று சேரும்படி பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
உருண்டைகளை கார்ன் மாவில் புரட்டவும்..
மிதமான சூடாக இருக்கும் எண்ணெயில் உருண்டைகளை பொரிக்கவும்.
எண்ணெயில் போட்டவுடன் உருண்டைகளை திருப்பி விடக் கூடாது.நிதானமாக பொன்னிறமாக வரும்படி பொரிக்கவும்.
கிரேவி: கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் ஒரு ஸ்பூன் மல்லித்தூள்,அரை ஸ்பூன் சீரகத்தூள்,ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து கிளறவும்.
ஒரு டம்ளர் நீர் சேர்த்து தேவையான உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் முந்திரி பவுடர் சேர்த்து சிறிது கொத்துமல்லி இலை சேர்த்து தக்காளி கரையும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
மசாலா ஆறியதும், நைசாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து அரைத்த மசாலா கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
மசாலா மிதமான தீயில் நன்கு கொதித்ததும் அரை கப் கெட்டியான பாலை மெதுவாக ஊற்றி கிளறி விடவும்..ஒரு ஸ்பூன் முந்திரி பவுடர் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை மிகவும் குறைவாக வைக்கவும்.
பால் லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து கோஃப்தாக்களை கிரேவியில் சேர்க்கவும். மேலாக அரை ஸ்பூன் கரம் மசாலா தூவி மல்லி இலை தூவி விடவும்.
சுவையான மலாய் கோஃப்தா ரெடி...
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum