Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மூன்று நாடுகளை இணைக்கும் நாகரீகத்தின் மூல நதி

Go down

மூன்று நாடுகளை இணைக்கும் நாகரீகத்தின் மூல நதி Empty மூன்று நாடுகளை இணைக்கும் நாகரீகத்தின் மூல நதி

Post by oviya Fri Aug 28, 2015 4:22 pm

நதிகளை சார்ந்து வாழ்ந்த மனித குழுவினர்தான் ஆதிகாலத்தில் நாகரீகத்தில் சிறந்து வளர்ந்து இருக்கிறார்கள்.
மனித நாகரீகம் வளரவளர தேவைகள் விரிவடைந்தது, அந்த தேவைகளை பூர்த்திசெய்ய வழிகள் கிடைத்தபோது, வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதுக்கான வழிகள் எல்லாம் நதிகள் மூலமும் நதிக்கரைகளை ஒட்டிய பகுதியிலுமே மனிதர்களுக்கு கிடைத்து வந்துள்ளது.

நைல் நதியை சார்ந்து எகிப்து நாகரீகம் வளர்ந்ததுபோல, சிந்துநதியை சார்ந்து சிந்துசமவெளி நாகரீகம் உருவானது. நதிகளை நாகரீகத்தின் தொட்டில் என்பதில் வியப்பில்லை.

சிந்துநதியின் எல்லை:

சிந்துநதியின் நீளம் 2880 கி.மீ. இது சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் சொந்தமானதால், மூன்று நாட்டினர் பற்றுக்கும் உரியது.

நாடுகளின் எல்லை பகிர்வுகள் இயற்கைக்கு உடன்பாடில்லாத விஷயம் என்பது, இயற்கை பிரதிநிதியான சிந்துநதி, மூன்று நாடுகளைக் கடந்து பயணிப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

சீனாவில் உள்ள திபெத் பீடபூமிதான் இதுக்கான பிறப்பிடம். செங்கி சங்போ இந்த நதிக்கான முதல்நிலை நீர் ஆதாரமாக உள்ளது. திபெத்தில் உள்ள கார் என்ற இடத்தில் இரண்டாம் நிலை நீர் ஆதாரமும் சேர்கிறது.

சீனாவில் தோன்றினாலும் இதன் நீளத்தில் 2% மட்டுமே அந்நாட்டின் நிலப்பரப்புக்குள் பாய்கிறது அடுத்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இது ஓடினாலும் இந்தியாவிலும் 5% சதவீதமே பாய்கிறது.

அதன்பிறகு, தன் பயணத்தை பாகிஸ்தானில் தொடரும் சிந்துநதி, 93 சதவீதம் அந்த நாட்டிலே பாய்ந்து பயனளிக்கிறது. இறுதியாக அரபிக்கடலில் கலந்து, தனது நன்னீர் என்ற தனித்துவத்தை கைவிடுகிறது.

அரபிக்கடலில் முதல்நிலையாக கலந்தாலும், நல் சரோவர் பறவைகள் சரணாலயம், சிந்துநதி டெல்டா பகுதியிலும், குஜராத் மத்திய பகுதியிலும் இரண்டாம் கிளைகளாக முடிவடைகிறது.

சிந்துவுக்கு வலது, இடது என இருபுறமும் பல கிளை நதிகள் உண்டு. மலைகள், பாறைகளின் ஊடே பாய்ந்து வருவதால் தெளிந்த நீராக உள்ளது.

அழைக்கப்படும் வேறு பெயர்கள்:

சிந்து நதி, சிந்த் என்று இந்தியர்களாலும், பாகிஸ்தானில் உருது மொழியில் ’தார்ய இ சிந்த்’ என்றும், ஆறுகளின் தந்தை (Father of River), என்றும் திபெத்தியர்களால் சிங்க நதி (Lion River) என்றும், இந்தி(yindhi) என்று சீனர்களும், ’நிலப்’ என்று துருக்கி மக்களாலும் அழைக்கப்படுகிறது.

ரிக் வேதம் பல புராணகாலத்து ஆறுகளை விவரிக்கிறது அதில் சிந்து நதிதான் இன்றளவும் உள்ளது. அதுவும் ஒரிரு முறையல்ல 175 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது.

சிந்துநதி பாகிஸ்தானின் பாசனத்துக்கு முதன்மை நீராதரமாக விளங்குகிறது. பஞ்சாபும் இந்த ஆற்றுப் பாசனத்தை நம்பியே செழிப்படைந்துள்ளது. நிறைய தொழிற்சாலைகளும் இந்த நதியை நம்பி பிழைக்கின்றன.

பாகிஸ்தானிலும் ஒரு பஞ்சாப் உள்ளது. பஞ்சாப் என்றாலே 5 நதிகள் பாயும் நிலம் என்றே பொருள். இங்கு பாயும் ஜீலம், செனப், ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஐந்து நதிகளுமே முடிவில் சிந்து நதியோடு கலந்து செல்கின்றன.

பழங்காலந்தொட்டு ஒரு நிலையான போக்கு கொண்டது இந்த பெரிய நதி, ஆனாலும் 1816 ல் ஏற்பட்ட பூகம்பத்தின் நிலஅடுக்கு நகர்வு மாற்றத்தால், ரான் ஆப் கட்ச் பகுதியிலிருந்து மேற்கே பிறழ்ந்து பன்னி புல்வெளிப்பகுதியை ஒட்டிச்செல்ல ஆரம்பித்தது.

குளிர்காலத்தில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படும், பருவமழை காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரை காட்டாறாகவே கரை புரண்டு நுரை பொங்க பாயும்.

’சிந்து’ என்ற பெயரே ஒரு பெரிய ஜனநாயக நாட்டுக்கும் ஒரு பெரிய மதத்துக்கும் வேர்ச் சொல்லாக அமைந்திருக்கிறது என்றால், இந்திய நாட்டு மக்கள் மீதான அதன் தாக்கத்தை அறிந்துகொள்ள வேறு விளக்கம் தேவையில்லை.

4000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது சிந்து சமவெளி நாகரீகம். சிந்து நதியை ஒட்டிதான் விவசாய சிந்தனை கூட விரிவடைந்திருக்கக் கூடும்.

காட்டாற்று வெள்ளமாக அது ஓடியபோது அதை உபநதியாகவும் ஓடைகளாகவும் பிரிக்க வழிதெரியாமலே, நீர்வேகம் குறைந்த கோடைகாலத்திலே பயிர்செய்துள்ளனர்..

1859 ம் ஆண்டில் ரவி ஆற்றின் மீது அப்பர் பரி டோப் கால்வாய் (UBDC) மாதேபூரிலிருந்து தலைமை இடமாக்கி உருவாக்கப்பட்டது. இதுதான் முதல் கால்வாய் பாசனம்.

மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா நூலில் ’இண்டோஸ்’ (Indos) என்ற கிரேக்க சொல்லுக்கு ஆறு என்று பெயர். அதுவே இந்த நதியின் பெயராக மறியதாக கூறியுள்ளார்.

கிரேக்க மன்னன் அலெக்ஸண்டர் நாடுபிடிக்கும் நோக்கத்தில் சிந்துநதியை கடந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

திபெத்தில் மட்டும் நம் கர்நாடக சிந்தனையாளர்கள் இருந்திருந்தால், காவிரியைபோல சிந்துவையும் முடக்கியிருப்பார்கள். பஞ்சாபிலும் பாகிஸ்தானிலும் பஞ்சமே பாய்ந்திருக்கும். அது இல்லாதது நல்லது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum