Top posting users this month
No user |
Similar topics
கொடியின் வேர் வகை
Page 1 of 1
கொடியின் வேர் வகை
நாக மல்லிகை வேர்:
இதை நாகமுட்டி வேர் என்றும் கூறுவர். நாக மல்லிகை வேரால் ஒழியாத தினவும், நெருங்கிய புடைகளும், கிருமிகளும் நீங்கும்.
நாட்டு மல்லிகை வேர்:
சர்வசுரம், நாவறட்சி, அக்கினி மந்தம், அதிசாரம், விதாகம் ஆகியவை போகும்.
சிறுகுறிஞ்சா வேர்:
அற்ப ஜந்துக்களின் நஞ்சு, வாத சுரம், வாத தோஷம், காசம், சுவாச காசம் இவற்றை நீக்கும்.
பேய்ச்சுரை வேர்:
கசப்புள்ள பேய்ச்சுரை வேரினால் சர்ப்ப சப்த வேகம், மகா விஷம், கோழை, காசம் இவை நீங்கும். இதில் வமனம் உண்டாகும்.
முசுமுசுக்கை வேர்:
இறுகிய கோழை, அற்ப வீரிய விஷம், வமனம், மார்பு நோய், குன்மம், பித்தாதிக்கம் இவை போகும்.
வெண்காக்கரட்டான் வேர்:
மாமூலி என்னும் காக்காட்டான் வேருக்கு வெள்ளை பிரமேகம், தலை நோய், சுரம், கண் நோய், ஆமம் ஆகியவை நீங்கும்.
கருங்காக்கரட்டான் வேர்:
மாந்தம், மலக்கிருமி, வாதாதிக்கம், சிலேஷ்ம ரோகம், மலக்கட்டு ஆகியவை நீங்கும்.
கொடிவேலி வேர்:
இதனைசித்திரமூலம் என்றும் கூறுவர். கொடிவேலி வேரானது வித்திரிதி, புண், சொறி, சிரங்கு, வாதரோகம், குதஸ்தான வித்திரி, குத்தல், சோபை, மூலரோகம், உதிரக்கட்டு, ஜலஸ்ராவம், மகோதரம் இவைகளை குணமாக்கும்.
பெரு மருந்தின் வேர்:
பித்த கோபம், சுவாசம், இருமல், சுரரோகம், சரீரக்குத்தல், வாத தோஷம், அற்ப விஷக்கட்டிகள் ஆகியவைகளை நீக்குவது மட்டும் அல்லாமல் கோச் சிகிச்சைக்கும் உதவுகிறது.
பெருங்காஞ்சொறி வேர்:
இருமல், இரைப்பு, சீதசுரம் ஆகியவை குணமாகும்.
சிறுகாஞ்சொறி வேர்:
சுவாசகாசம், திரிதோஷம், சுரம், கரப்பான், புண், வாத பெருக்கம், தாக ரோகம் இவைகளை நீக்கும்.
கருங்காஞ்சொறி வேர்:
இவற்றால் செய்த பொடி இருமல், ஜலஸ்ராவம், சிலேஷ்ம ரூட்சை, அன்னரோகம் ஆகியவற்றை நீங்கும்.
பச்சை திப்பிலி வேர்:
சிவந்த நீர் பசையுள்ள திப்பிலி வேரால் விதாகம், ஆயாசம், பற்பல மேகம், பித்தாதிக்கம் ஆகியவை நீங்கும். விந்துவையும், அழகையும் விருத்தியாக்கும்.
இன்புறா வேர்:
கபாதிக்கம், பித்த கோபம், காசம், ஈளை, விக்கல், பித்த சுரம், வயிற்று இரைச்சல் ஆகிஒயவை நீங்கும்.
நன்னாரி வேர்:
இதை நீறுண்டி என்றும் கூறுவர். இதை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் அதிக பித்தம் தீரும். அரைத்து கற்றாழை சோற்றோடு உண்டால் வண்டுக்கடி குணமாகும். மேலும் இது நீரேற்றம், பித்த நோய், தாகம், வாய் நீர்ச்சுரப்பு, அதிக சூடு, சுரவேகம் ஆகியவை தீரும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum