Top posting users this month
No user |
Similar topics
வெஜ் பிஸ்ஸா
Page 1 of 1
வெஜ் பிஸ்ஸா
ப்ரோசன் பிஸ்ஸா மாவு - ஒரு பாக்கெட்
பார்மஜான் மொசரில்லா சீஸ் - ஒரு பாக்கெட்
குடைமிளகாய் (காப்ஸிகம்) - ஒன்று
காளான் - 2 தேக்கரண்டி
ப்ரோக்கலி - 2 தேக்கரண்டி
கருப்பு ஆலிவ்ஸ் - ஒரு தேக்கரண்டி
ஆலோப்பினோ - வட்டமாக நறுக்கியது ஒன்று (காரமாக இருக்கும்)
பிஸ்ஸா சாஸ் - 6 தேக்கரண்டி
குடைமிளகாயை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காளானை துண்டுகளாக நறுக்கவும். ப்ரோக்கலியை பூப்பூவாக தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும். அவனை 350 Fல் முற்சூடு செய்து வைக்கவும். பிஸ்ஸா ஸ்டோன் அல்லது பேக்கிங் ட்ரேயில் எண்ணெயை ஸ்பெரே செய்து வைக்கவும்.
பிஸ்ஸா மாவை ப்ளாஸ்டிக் பேப்பர் அல்லது அலுமினியம் பாயில் போட்டு அதில் வைத்து சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் பெரிய வட்டமான வடிவில் தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ தேய்த்துக் கொள்ளவும்.
அதை எடுத்து பேக்கிங் ட்ரேயில் வைத்து அதன் மேல் பிஸ்ஸா சாஸை ஒரே சீராக எல்லா இடத்திலும் பரவும்படி ஸ்பூனினால் அல்லது ஸ்ஃபாசுலாவினால் தேய்த்து விடவும்.
அதன் பிறகு சாஸின் மேல் சீஸை தூவி விடவும். அதற்கும் மேல் காளான், ப்ரோக்கலி, ஆலிவ்ஸ், காப்ஸிகம், ஆலோபினோ தூவவும். இதில் விரும்பினால் தக்காளி, வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகள் சீஸ் பிஸ்ஸா மட்டும் சாப்பிட விரும்பினால் இதில் ஒரு பகுதியை காய்கறிகள் போடாமல் சீஸ் மட்டும் போட்டு பேக் செய்து எடுக்கலாம்.
பிஸ்ஸாவை முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் வைத்து 15 - 20 நிமிடங்கள் வைக்கவும். சீஸ் நன்கு உருகியதும் வெளியில் எடுக்கவும்.
சுவையான வெஜ் பிஸ்ஸா ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum