Top posting users this month
No user |
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான இறுதி முடிவு மக்கள் கையில் உள்ளது
Page 1 of 1

பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் கொழும்பு துறைமுக நகர நிர்மாணம் குறித்து இறுதி முடிவை எடுக்க அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அர்ஜூன் ஒபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் விஜித் மலல்கொட, நீதியரசர் எச்.சீ.ஜே.மடவல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனை கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பில் விபரமான அறிக்கை தயாரித்து அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்கள் கொழும்பு துறைமுக நிர்மாணிப்பு திட்டத்தை நிறுத்துமாறு கூறினால், அதனை நிறுத்த போவதாகவும் நிர்மாணிப்பது அவசியம் எனக் கூறினால், முன்னைய ஒப்பந்தங்கள் அனைத்தையும் இரத்துச் செய்து விட்டு புதிய ஒப்பந்தங்களை செய்து, திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum