Top posting users this month
No user |
பானி பூரி, பேல் பூரி, தஹி பூரிக்கான பூரி
Page 1 of 1
பானி பூரி, பேல் பூரி, தஹி பூரிக்கான பூரி
மெல்லிய ரவை - 1 கப்,
மைதா மாவு - 1/2 கப்,
அரிசி மாவு - 2 தேக்கரண்டி,
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
ரவை, மைதா, அரிசி மாவு, பேக்கிங் பவுடர், உப்பு எல்லாவற்றையும் கலந்து, ஐஸ் வாட்டர் ஊற்றி பிசைந்து கால் மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும்.
நன்கு அடித்து பிசையவும். கோலிக்குண்டு அளவு உருண்டைகளாக உருட்டி, அதிக தடிமனோ, ரொம்ப மெலிதாகவோ இன்றி தேய்க்கவும்.
தேய்த்தவைகளை காய விடாமல் உடனே எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
நன்கு உப்பி வர வேண்டும்.
உப்பி வந்தவைகளை தனியாகவும், உப்பாத பூரிகளை தனியாகவும் டப்பாக்களில் போட்டு வைக்கவும்.
தேவையான போது பானி பூரி, பேல் பூரி, தஹி பூரிகளை செய்து கொள்ளலாம்.
உப்பிய பூரிகள் பானி, தஹி பூரிக்கும், உப்பாத பூரிகள் பேல் பூரிக்கும் ஆகும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum