Top posting users this month
No user |
Similar topics
பேர்ல் மேங்கோ டிலைட்
Page 1 of 1
பேர்ல் மேங்கோ டிலைட்
பழுத்த மாம்பழம் - ஒன்று
ஜவ்வரிசி - கால் கப்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
சர்க்கரை - தேவைக்கேற்ப
மாம்பழத் துண்டுகள் - ஒரு தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதிலுள்ள ஸ்டார்ச் நீங்கும் வரை குழாயில் தண்ணீரைத் திறந்துவிட்டு நன்கு கழுவவும். பிறகு அதைக் குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த ஜவ்வரிசியை அதிலுள்ள பசைத் தன்மை நீங்கும் வரை மீண்டும் ஒரு முறை குழாயில் தண்ணீரைத் திறந்துவிட்டு நன்கு கழுவி வடிகட்டி எடுத்து வைக்கவும்.
மாம்பழத்தின் தோல் மற்றும் விதையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு தேங்காய்ப் பால் சேர்த்து கூழாக அரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் மாம்பழக் கூழுடன் சர்க்கரைச் சேர்த்துக் கொள்ளவும். மாம்பழத் துண்டுகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கண்ணாடி கோப்பையில் மாம்பழக் கலவையுடன் வேக வைத்த ஜவ்வரிசியைப் போட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் தூவி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுக்கவும். ஜில்லெனப் பரிமாற சுவையான பேர்ல் மேங்கோ டிலைட் (Pearl Mango Delight) ரெடி.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum