Top posting users this month
No user |
Similar topics
நெல்லிக்காய் தொக்கு
Page 1 of 1
நெல்லிக்காய் தொக்கு
பெரிய நெல்லிக்காய் - கால்கிலோ
மிளகாய்த்தூள் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 150 கிராம்
உப்பு - தேவையானளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
பெரிய நெல்லிக்காயை அவித்து விதை நீக்கவும். அதன் பின்பு அவித்து விதை நீக்கிய பெரிய நெல்லிக்காய், உப்பு, மிளகாய்த்தூள் இவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதை சூடாக்கவும். பின்பு தாட்சி(வாணலி) சூடானதும் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்.
அதில் கடுகு போட்டு வெடிக்க விட்டு சீரகம்(சோம்பு), பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
பிறகு விழுதாக அரைத்தவற்றை போட்டு கிளறவும். அதன் பின்பு அதை இறக்கி பரிமாறவும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum