Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஹரியாலி சிக்கன் டிக்கா வித் டிப்

Go down

ஹரியாலி சிக்கன் டிக்கா வித் டிப் Empty ஹரியாலி சிக்கன் டிக்கா வித் டிப்

Post by oviya Sun Aug 02, 2015 8:38 am


டிக்கா செய்ய:
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி (Tightly packed)
புதினா - 4 கொத்து
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 3 (அ) 4
எண்ணெய்/வெண்ணெய் - சிறிது
டிப் செய்ய:
தயிர் - அரை கப்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 2 பல்
உப்பு



டிக்கா செய்வதற்கு மிக்ஸியில் கொத்தமல்லித் தழையுடன் புதினா, மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.


பிறகு அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.


சிக்கனை நடுத்தரமான அளவு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, அரைத்து வைத்துள்ள கலவையில் கலந்து 2 - 5 மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.


ஊறிய சிக்கனின் மேலே சிறிது எண்ணெய் ஸ்ப்ரே செய்து க்ரில் செய்யவும். (அல்லது) பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் ஃபாயில் போட்டு எண்ணெய் தடவி சிக்கன் துண்டுகளை அடுக்கி 180 C’ல் முற்சூடு செய்த அவனில் சமைக்கவும். சிறிது நேரம் விட்டு விட்டு மீண்டும் வெண்ணெயை மேலே தடவலாம். வாசம் நன்றாக இருக்கும்.


டிப் செய்வத்ற்கு மிக்ஸியில் கொத்தமல்லித் தழையுடன் சீரகத் தூள், உப்பு மற்றும் பூண்டு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.


அதனுடன் ஒரு மேசைக்கரண்டி அளவு தயிர் விட்டு நைசாக அரைக்கவும். பிறகு மீதமுள்ள தயிரையும் சேர்த்து ஒரு முறை அரைத்து எடுத்து எலுமிச்சை சாறு கலந்தால் தயிர் கலந்த டிப் (Yogurt Dip) தயார்.


சிக்கன் வெந்ததும் எடுத்து டிப்போடு பரிமாறவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum