Top posting users this month
No user |
Similar topics
மீன் தேங்காய்பால் குழம்பு
Page 1 of 1
மீன் தேங்காய்பால் குழம்பு
மீன் - 250 கிராம்
சின்ன வெங்காயம்- 10
பச்சை மிளகாய்- 6
இஞ்சி பூண்டு விழுது- 1மேசைக்கரண்டி
மிளகாய் தூள்- ஒன்றரை மேசைக்கரண்டி
மல்லி தூள்-ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரைத் தேக்கரண்டி
கொடம் புளி- 3 (கொடம்புளி இல்லாவிட்டால் நெல்லிக்காய் அளவு புளி)
தேங்காய் பால்- 1/2கப்
எண்ணெய்- 1மேசைக்கரண்டி
வெந்தயம்- 1/4தேக்கரண்டி
கறிவேப்பிலை- 4 இனுக்கு
உப்பு- தேவையான அளவு
மீனை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கவும்.
குழம்பு செய்யும் பாத்திரத்தில் பாதியளவு இஞ்சி பூண்டு விழுது, பாதியளவு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், ஊறவைத்த கொடம்புளி (இல்லையென்றால் புளிக்கரைசல்), 2இனுக்கு கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பாதியளவு வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி மீதமுள்ள மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பொடி வாசனை குறைந்ததும் தேங்காய்பால், சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் இந்த கலவையை வெந்து கொண்டிருக்கும் மீனோடு சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum