Top posting users this month
No user |
Similar topics
ஆந்திரா நூனே ஓங்காய்
Page 1 of 1
ஆந்திரா நூனே ஓங்காய்
கத்திரிக்காய் - அரை கிலோ
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கடலைபருப்பு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிகாய் அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 4 பல் (தட்டியது)
பட்ட மிளகாய் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 1
ஸ்டப்பிங் மசாலாவிற்கு:
தேங்காய் - கால் மூடி
பட்டை - 1 (வறுத்தது)
மிளகு - 10 (வறுத்தது)
முழு பூண்டு - 1
நிலக்கடலை - 50 கிராம்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4 மேசைகரண்டி
கத்திரிக்காயை அடிப்பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை நான்காக கீறிக் கொள்ளவும்(காம்பு நீக்க கூடாது). மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
தேங்காய், பட்டை, மிளகு, பூண்டு, நிலக்கடலை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். கடைசியில் மிளகாய் தூள், தனியாதூள், உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி தனியாக எடுத்து வைக்கவும்.
நறுக்கின கத்திரிக்காயில் அரைத்த விழுது பாதியை எல்லா பக்கங்களிலும் பரவுமாறு தடவவும். இதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் பட்ட மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் கத்திரிக்காயை சேர்க்கவும். மீதி விழுதில் தண்ணீர் கலந்து அதில் விடவும்.
கத்திரிக்காய் வேகும் வரை வைத்திருந்து பின்னர் இறக்கவும்
வெறும் சாதத்திலும் சாம்பார், ரசத்துடனும் சாப்பிடலாம். பூரி சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum