Top posting users this month
No user |
Similar topics
முள்ளங்கி மாங்காய் சப்பாத்தி
Page 1 of 1
முள்ளங்கி மாங்காய் சப்பாத்தி
கோதுமை மாவு - 2 கப்
முள்ளங்கி - 2 (நடுத்தரமான அளவு)
மாங்காய் - ஒன்று (சிறியது)
ஓமம் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - அரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - ஒன்று (விரும்பினால்)
முள்ளங்கி மற்றும் மாங்காயைத் தோல் சீவி துருவி வைக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு ஓமம் போட்டு பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் (சேர்ப்பதாக இருந்தால்) சேர்த்து வதக்கி, முள்ளங்கி, மாங்காய்த் துருவல், மிளகாய்த் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தையும் நன்கு சுருள வதக்கியெடுத்து ஆறவிடவும்.
ஓரளவு ஆறியதும் அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். (தேவையெனில் சிறிது வெந்நீர் தெளித்து பிசையவும்).
பிசைந்த மாவை எண்ணெய் தடவி சற்று மெல்லிய சப்பாத்திகளாகப் போட்டு, தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்திகளை இரு புறமும் லேசாக சிவக்கவிட்டு எடுக்கவும்.
சுவையான முள்ளங்கி, மாங்காய் சப்பாத்தி ரெடி. காரம், புளிப்பு சேர்ந்த முள்ளங்கி மாங்காய் சப்பாத்தி சுவையில் அள்ளும். வெங்காயத் தயிர் பச்சடி, தக்காளி தொக்கு, வெங்காயத் தொக்குடன் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum