Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இட்லி மிளகாய் பொடி

Go down

இட்லி மிளகாய் பொடி            Empty இட்லி மிளகாய் பொடி

Post by oviya Sat Jul 18, 2015 12:09 pm



மிளகாய் - 100 கிராம்
பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு கப்
கடலைப் பருப்பு - அரை கப்
கறிவேப்பிலை - 10 கொத்து
வெள்ளை எள்ளு - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
Ads by Block The AdsAd Options



தேவையானப் பொருட்கள் அனைத்தையும் எடுத்து தயாராய் வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை கழுவி, காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.


வெறும் வாணலியில் பெருங்காயத்தை உடைத்துப் போட்டு 30 நொடிகள் வறுத்து விட்டு வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு மேலும் ஒரு நிமிடம் வறுக்கவும்.


பின்னர் கடலைப் பருப்பைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்த பிறகு கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.


அதன் பின்னர் எள்ளு சேர்த்து 30 நொடிகள் வறுத்து விட்டு, வாணலியில் இருந்து அனைத்தையும் எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.


மீண்டும் அதே வாணலியில் மிளகாய் வற்றலை போட்டு சுமார் 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.


வறுத்து எடுத்த அனைத்துப் பொருட்களையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.


ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும். சிலருக்கு மிகவும் தூளாக இருக்க வேண்டும். சிலருக்கு சற்று கரகரப்பாக இருக்கவேண்டும். தங்களின் விருப்பத்திற்கு தகுந்தார்போல் அரைத்துக் கொள்ளவும்.


எள்ளு சுவை பிடிக்காதவர்கள் எள்ளுக்கு பதிலாக 6 பல் பூண்டு சேர்த்துக் கொள்ளவும். பூண்டை முதலிலேயே சேர்த்து அரைக்காமல், மற்றப் பொருட்களைப் போட்டு அரைத்து விட்டு, கடைசியாக பூண்டைச் சேர்த்து இரண்டு சுற்ற ஓடவிட்டு அரைத்துக் கொண்டால் போதுமானது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum