Top posting users this month
No user |
மஹிந்த நாடாளுமன்றம் சென்றால்...?
Page 1 of 1
மஹிந்த நாடாளுமன்றம் சென்றால்...?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றம் சென்றால் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஒரு வாகனமும் வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டால், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும்.
அன்று நாட்டின் தலைவராக பதவி வகித்தவர் இன்று பியன் (காரியாலய உதவியாளர்) பதவிக்காக போராடுவது ஏன் என்பது புரியவில்லை.
மஹிந்த ராஜபக்ச அதிகார மோகத்தில் வீங்கிப் போயுள்ளார். எப்படியவாது நாடாளுமன்றிற்குள் செல்ல முயற்சிக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவியை விட்டு ஓய்வு பெற்றுக்கொண்ட போது அவருக்கான வரப்பிரசாதங்களை குறைக்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானால் அவருக்கு கடந்தகால வரப்பிரசாதங்கள் கிடைக்காது என்ற திருத்தத்தை கொண்டு வந்திருந்தார்.
அந்த திருத்தத்தின் அடிப்படையில் மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினராகினால் முன்னாள் ஜனாதிபதிக்கான சகல வரப்பிரசாதங்களையும் இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum