Top posting users this month
No user |
வெண்டை கத்தரி புளிக்கறி
Page 1 of 1
வெண்டை கத்தரி புளிக்கறி
வெண்டைக்காய் - 100 கிராம்
கத்தரிக்காய் - 100 கிராம்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - சிறிதளவு
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - தாளிக்க
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
புளியை சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெண்டைக்காயை அரை இஞ்ச் நீளத் துண்டுகளாக நறுக்கி பசை தன்மை போக வதக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், தாளிக்கவும். அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் கத்தரிக்காய் மற்றும் எல்லா தூள் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
பிறகு ஊற வைத்த புளியை கரைத்து ஊற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
கலவை கொதித்ததும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்திருக்கவும். நீர் வற்றி குழம்பு சுண்டியதும் இறக்கவும்.
சுவையான வெண்டை கத்தரி புளிக்கறி ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum