Top posting users this month
No user |
மஞ்சள்பூசணி பச்சடி
Page 1 of 1
மஞ்சள்பூசணி பச்சடி
பூசணிக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
வெல்லப்பொடி - 1/4 கப்
புளி - காட்டு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
முதலில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி வேகவைக்கவும்.
தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய் இவற்றை மிக்ஸியில் அரைத்துவைக்கவும்.
பூசணிக்காய் வெந்ததும் வெல்லத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கடைசியில் அரைத்துவைத்துள்ள தேங்காய் அரைப்பை சேர்க்கவும். கலவை சேர்ந்து வரும் வரை பொறுத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum