Top posting users this month
No user |
Similar topics
தக்காளி தோசை
Page 1 of 1
தக்காளி தோசை
புளிக்காத இட்லி மாவு - ஒரு கப்
தக்காளி - 2
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முதலில் தேவையானவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் மிளகு சீரகத்தை போட்டு பொடிக்கவும். பின் இஞ்சியை போட்டு ஒரு சுற்று சுற்றவும். தக்காளியையும் நறுக்கி அவற்றுடன் சேர்த்து அரைக்கவும்.
இட்லி மாவுடன் அரைத்த கலவை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி இரண்டு புறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.
சுவையான தக்காளி தோசை ரெடி. இதற்கு சாம்பார், தேங்காய் சட்னி நல்லாவே பொருந்தும். காரம் வேண்டுமென்றால் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum