Top posting users this month
No user |
ஈஸி கேப்ஸிகம் பொரியல்
Page 1 of 1
ஈஸி கேப்ஸிகம் பொரியல்
குடைமிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
முதலில் குடைமிளகாயினை நடுவில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு பொடியாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பின் காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
பிறகு வெட்டி வைத்துள்ள குடைமிளகாயினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
இத்துடன் உப்பு சேர்த்து மிதமான தீயில் தட்டு போட்டு மூடி 5 - 8 நிமிடம் வேகவிடவும்.(தண்ணீர் ஊற்ற வேண்டாம். காயில் உள்ள தண்ணீரேலே வெந்துவிடும்).
கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி 2 நிமிடம் வைக்கவும்.
இப்பொழுது சுவையான கேப்ஸிகம் பொரியல் ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum