Top posting users this month
No user |
Similar topics
சாடேட் புரோக்கலி & காலிஃபிளவர்
Page 1 of 1
சாடேட் புரோக்கலி & காலிஃபிளவர்
காலிஃப்ளவர் - ஒன்று
புரோக்கலி - ஒன்று
சிவப்பு வெங்காயம் - ஒன்று
பூண்டு - நான்கு பற்கள்
இஞ்சி - ஒரு துண்டு
ரெட் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் நிற கடுகு - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய பார்ஸ்லி தழை - கால் கோப்பை
ஆலிவ் ஆயில் - அரைக்கோப்பை
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
காலிஃப்ளவரையும், புரோக்கலியையும் சுத்தம் செய்து சிறிய பூக்களாக பிரித்தெடுத்துக் கொள்ளவும். அதன் காம்புகளையும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
இஞ்சி, பூண்டை தனித்தனியாக நசுக்கி வைக்கவும்.
ஒரு அகலமான நாண்ஸ்டிக் சட்டியில் எண்ணெயில் பாதியை ஊற்றி முதலில் காலிஃப்ளவரைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து புரோக்கலியையும் போட்டு அரைதேக்கரண்டி உப்பைப் போட்டு நன்கு வதக்கி ஒரு கால் கோப்பை நீரைச் சேர்த்து வேகவிடவும்.
தண்ணீர் நன்கு சுண்டும் வரை வேக வைத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
பிறகு அதே சட்டியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு பொரிய விடவும்.
பிறகு இஞ்சி பூண்டு, சில்லி ஃபிளேக்ஸை போட்டு வதக்கி வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.
அதைத் தொடர்ந்து வேகவைத்துள்ள காய்களை போட்டு நன்கு கிளறி விடவும்.
பிறகு இரண்டு நிமிடத்திற்கு எல்லாவற்றையும் கிளறி, வதக்கி விட்டு மிளகுத் தூளையும், பார்ஸ்லி தழையையும் தூவி விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum