Top posting users this month
No user |
Similar topics
கத்தரி, வெண்டை கடைசல்
Page 1 of 1
கத்தரி, வெண்டை கடைசல்
கத்தரிக்காய் - 250 கிராம்
வெண்டைக்காய் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பூண்டு - 4 அல்லது 5 பல்
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 3
வெந்தயம் - கால் தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காயை கழுவி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் புளி சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
காய்கள் வெந்ததும் ஆற வைத்து, மிக்சியில் மிளகாய், புளி, தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும். அதனுடன், காய்கள் சேர்த்து ஒன்று, இரண்டாக அரைத்துக் கொள்ளவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
பின்னர் கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்தை சேர்த்து ஒரு கொதி விடவும். கத்தரிக்காய், வெண்டைக்காய் கடையல் தயார். இது ராகி களி, சாதம் மற்றும் தோசைக்கு நன்றாக இருக்கும். உரைக்க, புளிக்க இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களின் வாய்க்கு சாப்பிட நன்றாக இருக்கும். கத்தரிக்காய், வெண்டைக்காயுடன் மாங்காயும் சேர்த்து கடையலாம். மாங்காய் சேர்க்கும் போது, புளியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum