Top posting users this month
No user |
Similar topics
வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு பொரியல்
Page 1 of 1
வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு பொரியல்
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
உருளைக்கிழங்கு - ஒன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
வெந்தயக்கீரையை சுத்தமாக கழுவி இலைகளை மட்டும் ஆய்ந்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் நறுக்கிய கிழங்கை போட்டு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
கிழங்கு பாதி வெந்தவுடன் கீரையை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
கீரை நன்கு வெந்த பின் வேகவைத்த பருப்பு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் வற்றியவுடன் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum