Top posting users this month
No user |
Similar topics
மீல்மேக்கர் உருளைக்கிழங்கு பொரியல்
Page 1 of 1
மீல்மேக்கர் உருளைக்கிழங்கு பொரியல்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
மீல்மேக்கர் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3/4 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் 30 நிமிடங்கள் போட்டு பின் கைகளால் தண்ணீரை முழுவதும் பிழிந்து எடுக்கவும்.
பின் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பை போட்டு பின் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு வதக்கி நறுக்கிய கிழங்கு, மீல்மேக்கர், உப்பு சிறிது எண்ணெய் விட்டு கிளறவும். கிழங்கு நன்கு பிரவுன் கலராக மாறும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum