Top posting users this month
No user |
Similar topics
ஆலு டிக்கி
Page 1 of 1
ஆலு டிக்கி
பெரிய உருளை - 3 (வேக வைத்தது)
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி (பொடித்தது)
ஸ்டஃபிங் செய்வதற்கு:
பச்சை பட்டாணி - 2/3 கப்
இஞ்சி - அரை மேசைக்கரண்டி (துருவியது)
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி (தேவையெனில்)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப்
உருளையை முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும். ரொம்பவும் வேக வைத்துவிட கூடாது. மிளகை நன்றாக தூள் செய்துக் கொள்ள வேண்டும். உப்பு மற்றும் மிளகை உருளையுடன் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்க வேண்டும். 10 உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
காய்ந்த பச்சை பட்டாணியாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். பிரெஷ் பச்சை பாட்டணியாக இருந்தால் அப்படியே மசித்து உபயோகிக்கலாம். சீரகத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைக்கவும். பட்டாணியுடன் இஞ்சி, கரம் மசாலா, உப்பு, மிளகாய் தூள், சீராக பொடி சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு மசித்து விட்டு பிசைந்து வைக்கவும். 10 பகுதியாக பிரித்து வைக்கவும்.
கையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துக் கொண்டு உருளை உருண்டையை தட்டி நடுவில் பட்டாணி கலவையை வைத்து மூடி (கொழுக்கட்டை போல் மூடி) வேண்டிய வடிவத்தில் தட்டி வைக்கவும்.
இதைப் போல் எல்லா உருளை உருண்டையிலும் கலவையை வைத்து வட்டமாக தட்டி வைக்கவும்.
பேனை காய வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய வைத்து டிக்கியை அடுக்கவும்.
ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும்.
கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum