Top posting users this month
No user |
Similar topics
ஆரஞ்சுத் தோல் துவையல்
Page 1 of 1
ஆரஞ்சுத் தோல் துவையல்
புளிச்சாறு :
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய்- 3
சிவப்பு மிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க-
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
வெந்தயம்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புடலங்காய் பொரியல் :
புடலங்காய் - 1
உப்பு - சிறிது
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1 (கிள்ளி வைக்கவும்)
கறிவேப்பிலை, பச்சை கொத்தமல்லி - சிறிது.
பருப்புத் துவையல் :
துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
தேங்காய்ப் பூ - 1/2 டேபிள் ஸ்பூன்.
உப்பு - சிறிது
பூண்டு - 1 சிறிய பல்
புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு போடவும்.
பூண்டு ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
சிவப்பு மிளகாய் சிறிய துண்டுகளாகக் கிள்ளி வைக்கவும்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் - பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் போட்டு, வெடித்ததும், தீயைக் குறைத்துக் கொண்டு, சிவப்பு மிளகாயை சேர்க்கவும்.
மிளகாய் லேசாக சிவந்ததும், அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு, வதக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும்.
கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை சேர்க்கவும். தட்டி வைத்துள்ள பூண்டை அதில் போடவும்.
பச்சை வாசனை போகக் கொதித்ததும் இறக்கி வைக்கவும். இது ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல், ரசம் போல நீர்க்கவும் இல்லாமல், மீடியமாக இருக்கும்.
புடலங்காய் பொரியல் செய்முறை :
புடலங்காயை மெலிதான வட்டங்களாக நறுக்கவும். கொஞ்சமாக கல் உப்பு சேர்த்து, பிசறி ஒரு பாத்திரத்தில் அமுக்கி வைக்கவும்.(அதுவே நீர் விட்டுக் கொள்ளும்)
இதற்குள் குக்கரில் சாதம் வைப்பது, புளி கரைத்து வைப்பது முதலான வேலைகளை செய்து விடலாம்)
பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு, வெடித்ததும், கிள்ளி வைத்துள்ள சிவப்பு மிளகாயைப் போட்டு, லேசாக சிவந்ததும், பிசறி வைத்துள்ள புடலங்காயைப் போட்டு, நன்கு வதக்கவும்.
தேவைப் பட்டால், சிறிது தண்ணீர் தெளித்து, வதக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும்.
பருப்புத் துவையல் செய்முறை:
துவரம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை, சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில், வறுத்த பருப்பு, தேங்காய்ப் பூ, சிவப்பு மிளகாய், உப்பு, பூண்டு பல், எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, துவையல் பதத்தில் அரைத்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum