Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் நடக்கும் இடைத்தேர்தல்: ஜெயலலிதா அறிக்கை

Go down

விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் நடக்கும் இடைத்தேர்தல்: ஜெயலலிதா அறிக்கை Empty விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் நடக்கும் இடைத்தேர்தல்: ஜெயலலிதா அறிக்கை

Post by oviya Fri Jun 26, 2015 3:16 pm

விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் நடக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (யூன் 27) நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது எல்லையில்லாத அன்பு வைத்திருக்கும் நீங்கள் அனைவரும் இடைத்தேர்தலில் என்னை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் இந்த இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என உங்களுக்கு தெரியும். நான் அரசியலில் நுழைந்த நாள் முதல் எனக்கு எதிராக பல கொடுஞ்செயல்களை எனது அரசியல் எதிரிகள் செய்த வண்ணம் உள்ளனர்.

என் மீது நீங்களும், உங்கள் மீது நானும் கொண்டிருக்கும் பற்றும், பாசமும் தான் தொடர்ந்து என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த அன்பின் காரணமாக தான் நான் மீண்டும் மீண்டும் மக்களிடம் வருகிறேன். அவர்களின் அன்பை பெறுகிறேன்.

ஏழை, எளிய, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்திற்காகத் தான் நான் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்ற இந்த இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum