Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து தகவல் இல்லை: அமெரிக்க தூதரகம்

Go down

ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து தகவல் இல்லை: அமெரிக்க தூதரகம் Empty ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து தகவல் இல்லை: அமெரிக்க தூதரகம்

Post by oviya Wed Jun 17, 2015 3:15 pm

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் தமக்கு இதுவரை எந்தத் தகவல்கள் வழங்கப்படவில்லை என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் ஊடக பேச்சாளர் ஜொசுவா ஷென்னை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி இவ்வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் வாக்குறுதியளித்துள்ளதாகவும் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் தூதரக ஊடக பேச்சாளரிடம் வினவப்பட்டமைக்கு பதிலளித்த போதே அவர், குறித்த விஜயம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்கள் தொடர்பான முழுமையான அறிக்கை தம்மிடம் இல்லை எனவும் அவரால் பரிந்துரை செய்யப்பட்ட இலங்கைக்கான விஜயம் குறித்து இதுவரை எவ்வித அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடமாவது அமெரிக்க ஜனாதிபதி இலங்கை வருவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் இவ்விஜயம் தொடர்பில் தமக்கு எவ்வித கருத்துக்களையும் தற்போதைக்கு வெளியிடமுடியாது என தூதரக ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum