Top posting users this month
No user |
Similar topics
ராஜஸ்தானி சிக்கன்
Page 1 of 1
ராஜஸ்தானி சிக்கன்
சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் - 2
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - கால் கப்
கொத்தமல்லி தழை
அரைக்க:
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
ஊற வைக்க:
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
வெங்காயம் - ஒன்று
தயிர் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் (கருப்பு & பச்சை)
நெய் - 4 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றலை சூடான நீரில் ஊற வைக்கவும். இத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்.
பாதி விழுதுடன் வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
இத்துடன் ஊற வைக்க வேண்டிய மற்ற பொருட்கள் சேர்த்து சிக்கனுடன் நன்றாக கலந்து 5 மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த சிக்கன் சேர்க்கவும்.
மீதம் உள்ள மிளகாய் அரைத்த விழுதை நன்றாக நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
இதையும் சிக்கனில் சேர்க்கவும். பச்சை வாசம் போனதும் மல்லி தூள், உப்பு சேர்த்து தேவையான நீர் விடவும்.
மசாலா வாசம் போய் சிக்கன் நன்றாக வெந்ததும் மீதம் உள்ள தயிர் சேர்த்து கலந்து ஒரு கொதி விடவும். சிறுந்தீயில் 5 நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.
சுவையான காரசாரமான ராஜஸ்தானி சிக்கன் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum