Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இது சர்வதேச அகதிகளின் வலி ...

Go down

இது சர்வதேச அகதிகளின் வலி ... Empty இது சர்வதேச அகதிகளின் வலி ...

Post by oviya Thu Jun 04, 2015 1:00 pm

கேட்பாரற்று காற்றில் கரைந்த ஈழ அகதியின் துயர்மிக்க குரல், சர்வதேச அரங்கில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஈழ எழுத்தாளர் ஷோபா சக்தி ஹீரோவாக நடித்த 'தீபன்’ திரைப்படம், புகழ்பெற்ற 'கேன்ஸ்’ திரைப்பட விழாவில் 'பாம்தோர்’ (தங்கப் பனை) விருது வென்றிருக்கிறது.

இது ஒரு பிரெஞ்சுப் படம். ஆனால், ஈழ அகதிகளின் வலிகளைப் பேசும் படம்.

2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பிக்கும் மூன்று பேர், பிரான்ஸுக்குள் அகதிகளாக நுழைகிறார்கள். அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களே 'தீபன்’.

இது ஈழ அகதிகளின் வலி மட்டும் அல்ல... சர்வதேச அகதிகளின் வலி’ என்கிறார் படத்தின் இயக்குநர் ழாக் ஓதியாக்.

தனது படங்களுக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில், ஏற்கெனவே இருமுறை விருதுகளைத் வென்றிருக்கும் இவர், பிரெஞ்சு சினிமாவின் தந்தை மிக்கேல் ஓதியாக்கின் மகன்.

ஷோபா சக்தியுடன் நடித்திருக்கும் காளீஸ்வரி, சென்னையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். 'மெட்ராஸ்’ திரைப்படத்தில் மாரியாக நடித்த வினோத்தின் மனைவி. இவர்களோடு க்ளோடின் என்கிற சிறுமியும் நடித்திருக்கிறாள்.

ஈழத் தமிழை அழகாகப் பேசும் க்ளோடின், தற்போது பிரான்ஸ்வாசி. வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் 'தீபன்’ வெளியாகவுள்ள நிலையில் பிரான்ஸில் வசித்து வரும் ஷோபா சக்தியை தொலைபேசியில் பிடித்தேன்.

எல்லா தமிழர்களையும்போல நானும் சினிமா வெறியன்தான். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன். சின்ன வயதில் நாடகம், கூத்து என நடித்திருக்கிறேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் 'விடுதலைக் காளி’ கூத்தில் கூட நடித்திருக்கிறேன். கடந்த மாதம் கனடாவில் நான் எழுதிய நாடகம் ஒன்று அரங்கேற்றம் கண்டது.

லீனா மணிமேகலை இயக்கிய 'செங்கடல்’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி, சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அவ்வளவுதான் என் சினிமா அனுபவம்.

இப்போது, இலங்கைப் பிரச்னையை சர்வதேச அரங்கில் பேசும் 'தீபன்’ என்ற ஓர் உலகப் படத்தில் என் பங்களிப்பும் இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி' என்கிறார்.

'தீபன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் வசனங்களை எழுதியது ஷோபா சக்தி.

'படம் தொடங்குவதற்கு முன்பே படக் குழுவினர், இலங்கைப் பிரச்னை குறித்து நீண்ட ஆய்வை செய்துவிட்டுத்தான் வேலையைத் தொடங்கினார்கள்.

நான் உள்ளே சென்றதும் மேற்கொண்டும் அதுகுறித்து நிறைய விவாதித்தோம். படம் நெடுக, திரைக்கதையில் பல சின்னச் சின்ன விஷயங்களைச் சேர்த்ததில் என் பங்கும் உண்டு. படத்தில் 80 சதவிகித வசனங்கள் தமிழ்தான்' என்கிறார் ஷோபா சக்தி.

''பிரெஞ்சு விமர்சகர்கள் சிலர், 'தீபன்’, அழகான காதல் படம் என்கிறார்களே?''

''ஆமாம்... வழக்கமா நம் தமிழ் இயக்குநர்கள் சொல்வாங்களே... 'இதுவரை சொல்லப்படாத கோணத்தில்’னு. அப்படியும் சொல்லலாம்.

காதலை இதுவரை பார்த்திராத கோணத்தில் இயக்குநர் சொல்லியிருக்கிறார். இவரது சிறப்பே, உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருந்து மனித உணர்வுகளைச் சொல்வதுதான்.

யுத்தத்தின் வடுக்களையும் படம் பிடித்திருக்கிறோம்.

அந்தப் பின்னணியில் வாழ்க்கையைத் தொலைத்த இருவருக்கு இடையில் ஒரே ஆறுதலாக இருக்கும் காதலையும் சொல்லியிருக்கிறோம்'' என்கிற ஷோபா சக்தி, ''அரசியல் பேசும் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதுவதுடன் நடிக்கவும் தயார்'' என்கிறார்.

நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கியவர். அந்த அமைப்பின் மீது கடும் விமர்சனங்களையும் செய்து வருபவர். இலங்கைப் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் சர்வதேசப் படத்தில் பணி புரியும் போது, சில சமரசங்களை செய்யகொள்ள நேரிட்டிருக்குமே?

20 வருடங்களாக ஈழ மக்களின் வலிகளையும் புலம்பெயர்ந்த மக்களின் சிக்கல்களையும் எழுதி வருகிறேன். அதன் நீட்சிதான் 'தீபன்’. இதில் நான் முரண்படுவதைப் போன்ற விஷயங்கள் எங்கும் இல்லை.

கேன்ஸ் திரைப்பட விழாவில் 'தீபன்’ திரையிடப்பட்ட பின்பு, இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் நடத்திய இனப்படுகொலை யுத்தத்துக்காக, உலக மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அழுத்தத்தை 'தீபன்’ ஏற்படுத்தியிருக்கிறது!
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum