Top posting users this month
No user |
Similar topics
பனீர் கோஃப்தா
Page 1 of 1
பனீர் கோஃப்தா
கோஃப்தாவுக்கு:
-------------------
பனீர் - 200 கிராம்,
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
பச்சை மிளகாய் - 3,
மைதா - 1/2 கப்,
பிரட் தூள் - 1 கப்,
முந்திரி - 8,
உலர் திராட்சை - 25,
வெண்ணெய் - 2 தேக்கரண்டி,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
கிரேவிக்கு:
-------------
பெரிய வெங்காயம் - 3,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி,
முந்திரி - 15,
கசகசா - 1 மேசைக்கரண்டி,
பால் - 1/4 கப்,
க்ரீம் - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, அதனுடன் உப்பு சேர்த்து, கட்டி இல்லாமல், நைசாக பிசைந்து வைக்கவும்.
பனீரை துருவி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், முந்திரி, திராட்சையுடன் கலந்து நெல்லிக்காயளவு உருட்டி வைக்கவும்.
உருளைக்கிழங்கு கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து, ஒரு பனீர் உருண்டையை உள்ளே வைத்து, மூடி, கோஃப்தாக்களாக செய்யவும்.
மைதாவை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், செய்து வைத்த கோஃப்தாக்களை மைதா கரைசலில் முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
முந்திரி, கசகசாவை வெதுவெதுப்பான பாலில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும்.
வாணலியில் வெண்ணெயை போட்டு, உருகியவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், தனியா தூள், மிளகாய் தூள், அரைத்த கலவை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
கோஃப்தாக்களை அடுக்கி, க்ரேவியை மேலாக விட்டு, க்ரீமை ஊற்றி அலங்கரிக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum