Top posting users this month
No user |
பிந்தி மசாலா
Page 1 of 1
பிந்தி மசாலா
பெரிய சைஸ் வெண்டைக்காய் - 1/4 கிலோ
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
வரமிளகாய் - 4
உப்பு - சிறிது
மல்லி(முழு) - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 பின்ச்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மல்லி, வெந்தயம், சீரகம், மிளகாய், தேங்காய்த்துருவல் அனைத்தையும் எண்ணெயில் மணம் வரும் வரை வறுக்கவும். இதனுடன் வறுத்து தோலுரித்த வேர்க்கடலையுடன் கொரகொரப்பாக பொடி செய்யவும். இதில் உப்பு சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
வெண்டைக்காயை தலைப்பகுதியை நறுக்கி விட்டு நீளமாக நறுக்கவும். வெண்டைக்காய் இரண்டு பகுதியாக வராமல் நுனியில் ஒட்டி இருக்குமாறு நறுக்கவும்.
உள்ளே இருக்கும் விதைப்பகுதியை நீக்கி விட்டு மசாலவை உள்ளே ஸ்டஃப் செய்யவும்.
எல்லா வெண்டைக்காய்களிலும் இதே முறையில் செய்து நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு மொறுகலாக இருப்புறமும் பொரித்து எடுக்கவும்.
திருப்பிப்போடும்பொழுது மசாலா பிரிந்து வெளியில் வந்து விடாவண்ணம் மெதுவாக திருப்பி விடவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum