Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உள்நாட்டு விசாரணை! வலுக்கும் சந்தேகங்கள்!

Go down

உள்நாட்டு விசாரணை! வலுக்கும் சந்தேகங்கள்!           Empty உள்நாட்டு விசாரணை! வலுக்கும் சந்தேகங்கள்!

Post by oviya Sun May 24, 2015 3:13 pm

உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கடந்த புதன்கிழமை ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய தனது இரண்டாவது கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.
ஜூன் மாதத்தில் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், அது சர்வதேச தரத்துடன், இடம்பெறும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், உறுதியான கருத்து வெளியிடப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக, ரைம்ஸ் சஞ்சிகைக்கு கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில், ஜூன் மாத இறுதியில் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைக்குழு அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாத முற்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்குச் சென்றிருந்த போது பி.பி.சி யின் சிங்கள சேவையான சந்தேசியவுக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில், உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை தாம் இன்னும் ஒரு மாதத்திற்குள் அறிவிப்பதாக கூறியிருந்தார்.

அதற்குப் பின்னரே அவர், ரைம்ஸ் சஞ்சிகைப் பேட்டியில் ஜூன் இறுதி என்ற காலவரம்பை வெளியிட்டார்.

இப்போது அவர், அடுத்தமாதம் விசாரணைக் குழு உருவாக்கப்பட்டு, செப்டெம்பரில் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ,அதன் முன்னேற்றங்கள் குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஜூன் மாதம் உருவாக்கப்படக் கூடிய ஒரு உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணைக் குழுவினால் ,வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முழுமையான விசாரணைகளை நடத்தி முடிக்கவோ ,அல்லது ஒரு தெளிவான அறிக்கையை சமர்ப்பிப்பதோ சாத்தியமில்லை.

இதுவரைக்கும் சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் நடத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் அனைத்துமே வரையறுக்கப்பட்ட கால்ப்பகுதிக்குள், எல்லாத் தரவுகளையும் சேகரிக்கத்தக்கதொரு சூழலில் இட்மபெற்றிருக்கவில்லை.

அதனால் தான் அவை முழுமை பெறவோ அல்லது நம்பகமானவையாக ஏற்றுக்கொள்ளப்படவோ முடியாமல் போனது.

ஐ.நா பொதுச் செயலர் நியமித்த நிபுணர் குழு, போர்க்குற்றங்கள் நிகழ்ந்தனவா என்பதை மட்டுமே ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே தவிர, அது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுமில்லை. அதற்கு அனுமதிக்கப்படவும் இல்லை.

அதுபோலவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தியுள்ள அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத விசாரணையும் கூட ,இலங்கையில் விசாரணைகள் நடத்த அனுமதிக்கப்படாத சூழலில் தான் இடம்பெற்றது.

அதுவும்,ஆழமான விசாரணைகளுக்குள் செல்ல முடியவில்லை. காரணம் அது வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் முடிக்கப்பட வேண்டியிருந்தது.

அதைவிட குற்றங்கள் தொடர்பான மேலோட்டமான விடயங்களைத் தான் அந்த விசாரணை தாங்கியிருந்ததே தவிர, குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை குறுக்கு விசாரணை செய்யும் விசாரணையாக அது அமையவில்லை.

அதுபோலவே உள்நாட்டில் இராணுவமும், அரசாங்கமும் நடத்திய விசாரணைகள் பக்கச்சார்பானவையாகவும், எல்லாத் தரப்பினது சாட்சியங்களைப் பெறாமலும் தான் நடத்தப்பட்டன.

இந்தநிலையில், உள்நாட்டில் நடத்தப்படக் கூடிய போர்க்குற்ற விசாரணை முழுமையானதாகவும், நம்பகம் வாய்ந்ததாகவும் அமைய வேண்டுமானால், குறுகிய காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டிய அவகாசத்தைக் கொண்டதாகவோ அல்லது விசாரணைப் பரப்புகள் சுருக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது இது மிக முக்கியமான விடயம்.

இந்த வகையில், இந்த விசாரணையின் அறிக்கையையோ அல்லது தெளிவான முன்னேற்றத்தையோ, ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பரில் நடக்கவுள்ள அமர்வில் ஒருபோதும், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்க முடியாது.

ஒரு விசாரணையை நடத்துகிறோம் அதில் யார் யார் இடம்பெற்றுள்ளனர், இதுவரை இத்தனை சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன என்பது போன்று மேலோட்டமான சில தரவுகளை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை வேண்டுமானால், அராங்கத்தினால் சமர்பிக்கக் கூடியதாக இருக்கும்.

எவ்வாறாயினும், இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குரிய விடயமாக இருக்கிறது.

ஏனென்றால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் என்பது, புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கடைசியான கால அவகாசமாக இருக்கிறது.

அதேவேளை, ஜெனீவாவிலும் செப்டெம்பர் மாதமே இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பரில் நடக்கவுள்ள அமர்வில், தாம் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை தொடர்பாக தெளிவானதொரு முன்னேற்றத்தை காண்பிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.

ஆனாலும் செப்டெம்பருக்குள் உள்நாட்டு விசாரணையில் முன்னேற்றத்தைக் காட்டுவது மட்டுமல்ல, அதற்குள் புதிய அரசாங்கமும் தெரிவு செய்யப்பட்டாக வேண்டிய சிக்கலும் உள்ளது.

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி செப்டெம்பருக்கு முன்னதாக, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியிருந்ததாக தகவல்.

கடந்த வாரத்துக்கு முந்திய வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்.பாராளுமன்றம் கலைக்கப்படுவது, தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆராயப்பட்ட போது, இதனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

செம்டெம்பரில் ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டாக வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இருந்தாலும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படக் கூடிய உள்நாட்டு விசாரணைகள் அதற்குள் எவ்வாறு முன்நோக்கி நகர்த்தப்படும் என்பதில் கேள்விகள் இருக்கின்றன.

அதற்கு முக்கிய காரணம், இந்த மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தான்.

பாராளுமன்றம் எந்தவேளையில் கலைக்கப்பட்டாலும், ஜூலை அல்லது ஒகஸ்ட் மாதமே தேர்தல் நடக்கப் போகிறது.

தேர்தல் காலத்தில் ஒரு போர்க்குற்ற விசாரணை என்பது எந்தளவுக்கு விரைவாக முன்னெடுத்துச் செல்லப்படும் என்ற கேள்வி இருக்கிறது.

தற்போதைய அரசாங்கம், இந்தக் காலக்கட்டத்தில் போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை விரும்பாது.

இப்போது சாதாரணமாக நிதி முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, முன்னைய ஆட்சியில் இருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கே கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

பஷில் ராஜபக்சவை வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்ட போது, பாராளுமன்றத்துக்குள் இரவிரவாகப் போராட்டம் நடத்தி பெரும் வரலாற்றுக் கறையை ஏற்படுத்தியது எதிர்க்கட்சி.

இப்படியான நிலையில், போர்க்குற்ற விசாரணை என்ற வரும் போது, அந்தக் காலக்கட்டத்தில், அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைமைகள், இராணுவத் தலைமைகள் விசாரிக்கப்படுவது இயல்பாகவே இருக்கும்.

அவ்வாறானதொரு நிலை ஏற்படும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவோ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவோ அல்லது படை அதிகாரிகளோ போர்க்குற்ற விசாரணைக் குழுவினால் சாட்சியமளிக்க அல்லது தகவல்களை உறுதிப்படுத்த அழைக்கப்பட்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

முன்னைய ஆட்சியில் எந்த விசாரணைகளும் நடத்தப்பட இடமளிக்க முடியாது என்று கூறிக் கொண்டே, மின்சார நாற்காலியில் அமர்த் தயார் என்று வாக்கு வேட்டையாடிய மஹிந்த ராஜபக்ச போன்றவர்கள், இத்தகைய வாய்ப்பொன்று கிடைத்தால் அதை சும்மா விட்டு வைப்பார்களா?

அதுவும், முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தேர்தலில், இதுபோன்ற உணர்வு பூர்வமான விடயங்கள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

எனவே, உள்நாட்டு விசாரணைக் குழுவொன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட்டாலும், அது பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை எவ்வாறு முன்நகர்த்தப்படும் என்பதில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.

இன்னொரு பக்கத்தில் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடலில், வெளியிட்ட மற்றொரு கருத்தும் கவனிப்புக்குரியதாக உள்ளது.

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, போரை நடத்தியவர்களின் நலன்களை பாதுகாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்றும், எனினும் பொறுப்புக்கூறும் விவகாரத்தில் எவரேனும் குற்றவாளியாக காணப்பட்டால், சட்டத்தின் படி அந்த விவகாரம் அணுகப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது போர்க்குற்ற விசாரணையின் போது போரை வெற்றி கொள்ள உதவிய அரசியல் தலைமைகள் மற்றும் இராணுவத் தலைமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற கருத்து சூசகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பொறுப்புக்கூறல் விவகாரத்தில் குற்றவாளியாக காணப்படும் எவரும் சட்டரீதியாக அணுகப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் உள்ள குழப்பத்தை வெளிப்படுத்துகிறது.

போரில் வெற்றியீட்ட உதவியவர்களை பாதுகாப்போம் என்கிறார், குற்றவாளிகளைத் தண்டிப்போம் என்றும் கூறுகின்றார். இந்த இரண்டையும் ஒரே வகையில் செய்ய முடியாது.

ஏனென்றால் போரில் வெற்றியீட்ட உதவியவர்களே போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு எந்தளவுக்கு உறுதியானது, உண்மையானது என்று கேள்வி எழுப்ப வைக்கிறது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் என்பது மிக முக்கியத்துவமான ஒன்றாகவே இருக்கும். அது இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு, மிகப்பெரிய சோதனையாக அமையலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum