Top posting users this month
No user |
Similar topics
இறால் சுரைக்காய் குழம்பு
Page 1 of 1
இறால் சுரைக்காய் குழம்பு
இறால் - கால் கிலோ
சுரைக்காய் - கால் கிலோ
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 6 பல்லு
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
வடகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடகம் தாளித்து பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய சுரைக்காய் மற்றும் இறால் சேர்த்து வதக்கவும்.
பின்பு மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்ததும் மிளகுத் தூள் மற்றும் புளிக் கரைசலை சேர்க்கவும். தீயின் அளவை மிதமாக வைத்து கொதிக்க விடவும்.
கலவை 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். இறால் சுரைக்காய் குழம்பு தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum