Top posting users this month
No user |
Similar topics
கூழ் வற்றல்
Page 1 of 1
கூழ் வற்றல்
பச்சரிசி - அரைப்படி
உப்பு - 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 10
ஜவ்வரிசி - அரை ஆழாக்கு
பச்சரிசியை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் எடுத்து நீரை வடித்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து புளிப்பதற்காக மூடி வைத்து விட வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து மாவு புளித்தவுடன் அதில் பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைத்து மாவுடன் கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஜவ்வரிசியைப் போட்டு சுமார் பத்து நிமிடங்கள் வேக விடவும்.
ஜவ்வரிசி வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள அரிசி மாவினை சிறிது சிறிதாக அதில் ஊற்றி விடாது கிளறவும்.
எல்லாம் சேர்ந்து நல்ல பதமாக வெந்தவுடன் இறக்கி சற்று ஆற விட்டு, முறூக்கு அச்சு கொண்டு விரும்பியவாறு வற்றல்களாகப் பிழிந்து காய வைக்கவும்.
இதனை இரண்டு மூன்று நாட்கள் நன்கு காய வைக்க வேண்டும். முதல் நாள் துணியில் பிழிந்து காய வைக்கவும். பிறகு அதை துணியில் இருந்து தனியே பிரித்து எடுத்து மேலும் இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum