Top posting users this month
No user |
Similar topics
கதம்ப பொரியல்
Page 1 of 1
கதம்ப பொரியல்
தேவையானப் பொருட்கள்
கேரட் - 100 கிராம்
பட்டாணி - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
காலிஃப்ளவர் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேங்காய் சில் - 2
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
தாளிக்க;
பட்டை - ஒன்று
அன்னாசிப்பூ - சிறிது
பட்டாணியை ஊறவைக்கவும். (பச்சை பட்டாணி ஊற வைக்க வேண்டாம்) உறவைத்த பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து, சிறியதாக நறுக்கவும். காலிஃப்ளவர் பூவை வெந்நீரில் போட்டு எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி நறுக்கவும்.
தேங்காயுடன் 2 பல் பூண்டு சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, அன்னாசிப்பூ போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு காய்களை சேர்த்து கிளறி, வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை போட்டு நன்கு கிளறி இறக்கி மல்லித்தழை கிள்ளி தூவவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum