Top posting users this month
No user |
Similar topics
முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
முருங்கைக்காய் கூட்டு
முருங்கைக்காய் - 3
மிளகாய் வற்றல் - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
பயத்தம் பருப்பு - 50 கிராம்
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
டால்டா - ஒரு தேக்கரண்டி
முருங்கைக்காயை ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் பயத்தம் பருப்பை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி இட்லி பானையில் வைக்கவும். பிறகு பருப்பு வைத்த அதே தட்டில் முருங்கைக்காய் துண்டுகளையும் வைத்து இரண்டையும் 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்பை போட்டு பெருங்காயத் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
2 நிமிடம் கழித்து சற்று கொதித்ததும் வேக வைத்திருக்கும் முருங்கைக்காயை போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். பிறகு கொதிக்கும் பருப்பில் உப்பு போட்டு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து தேங்காய் விழுதை போடவும். பிறகு 2 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
ஒரு குழிக்கரண்டியில் டால்டாவை போட்டு தீயை குறைத்து வைத்து உருக விடவும்.
டால்டா உருகியதும் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் போட்டு தாளிக்கவும். சீரகம் நன்கு டால்டாவில் பொரிய வேண்டும்.
பிறகு இறக்கி வைத்திருக்கும் முருங்கைக்காய் கூட்டில் தாளித்தவற்றை ஊற்றி கிளறி விடவும்.
சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum