Top posting users this month
No user |
Similar topics
அரைத்த குடைமிளகாய் கறி
Page 1 of 1
அரைத்த குடைமிளகாய் கறி
குடைமிளகாய் - ஒன்று
மிளகாய் வற்றல் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
குடை மிளகாயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றலின் காம்பை கிள்ளி விட்டு எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பிறகு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாயை போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விடவும்.
ஒரு நிமிடம் பிரட்டிய பிறகு தட்டை வைத்து மூடி 4 நிமிடம் வேக வைக்கவும். மூடி வைத்தால் எளிதில் வெந்து விடும்.
காய் வேகும் நேரத்தில் மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4 நிமிடம் கழித்து மூடியை திறந்து மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு மூடி விடவும். 5 நிமிடம் கழித்து திறந்து 2 நிமிடம் நன்கு கிளறி காய் நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை போடவும்.
அரைத்த விழுதை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு மசாலா ஒன்றாக சேர்ந்ததும் 3 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
இப்போது அரைத்த குடைமிளகாய் கறி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum