Top posting users this month
No user |
Similar topics
தொண்டேக்காய் பல்யா
Page 1 of 1
தொண்டேக்காய் பல்யா
கோவக்காய் - ஒரு பெரிய கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3 (சுவைக்கேற்ப)
தனியா - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
வெறும் கடாயில் உளுந்து, கடலைப்பருப்பு, தனியா மற்றும் மிளகாய் வற்றலை வறுக்கவும்.
அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு நீர் ஊற்றாமல் கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளித்து, கறிவேப்பிலை மற்றும் நீளவாட்டில் நறுக்கிய கோவக்காய்ச் சேர்த்து பிரட்டவும்.
நீர் இல்லாமல் சிறிது நேரம் பிரட்டி மூடிவிட்டு, பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு மூடி வேகவைக்கவும். நன்றாக வெந்து நீர் வற்றியதும் வறுத்து பொடி செய்தவற்றைச் சேர்த்து கிளறவும்.
பொடி சேர்த்த பிறகு 3 - 4 நிமிடங்கள் சிறுதீயில் வைத்து பிரட்டி எடுத்தால் சுவையான தொண்டேக்காய் பல்யா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum