Top posting users this month
No user |
வேர்க்கடலை சுண்டல்
Page 1 of 1
வேர்க்கடலை சுண்டல்
உரித்த பச்சை வேர்க்கடலை - அரைக்கிலோ
காய்ந்த மிளகாய் - நான்கு
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - கால்க்கோப்பை
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் உரித்த வேர்க்கடலையை போட்டு தேவையான தண்ணீரை ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்புத்தூள், மஞ்சள்தூளை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். நீரை வடித்து விடவும்.
சட்டியை காயவைத்து எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். அதில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.
பிறகு அதில் வேகவைத்த கடலையைக் கொட்டி கலக்கவும். மீதமுள்ள உப்பையும் போட்டு நன்கு வறுக்கவும். வேர்க்கடலையிலுள்ள நீர்முற்றிலும் சுண்டியவுடன் தேங்காயையும், எலுமிச்சைசாற்றையும் தெளித்து இறக்கி விடவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சத்தான சிற்றுண்டி இது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum