Top posting users this month
No user |
Similar topics
கொண்டைக்கடலை சுண்டல்
Page 1 of 1
கொண்டைக்கடலை சுண்டல்
கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 6
அல்லது பெரிய வெங்காயம் - பாதிபாகம்
பச்சைமிளகாய் - 2 கீறியது
கடுகு - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு செ.மீ துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - 1.5 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
தேங்காய் துருவல் - கால் கப்
கொண்டைக்கடலையை இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். குக்கரில் 7 விசில் வரை விடலாம்.
தேங்காய் எண்ணெயை காயவைத்து அதில் கடுகு போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் வெந்த கடலையை கொட்டி கிளறி 2 பின்ச் பெருங்காயப் பொடி தூவி மூடி இட்டு 2 நிமிடம் வைக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் தூவி உடனே இறக்கி விடவும். சுவையான, மணமான சுண்டல் ரெடி. வெறும் கஞ்சிக்கு கூட அருமையாக இருக்கும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum