Top posting users this month
No user |
Similar topics
தக்காளி சாஸ் / கெட்சப்
Page 1 of 1
தக்காளி சாஸ் / கெட்சப்
தக்காளி சாஸ் / கெட்சப் தேவையான பொருட்கள்
பெங்களூர் தக்காளி - 1 கிலோ
சீனி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 5 பல்
உப்பு - 3 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு பொடி - 1 டீஸ்பூன்
சீரகம் பொடி - 1 டீஸ்பூன்
ஏலம், பட்டை, கிராம்பு பொடி - 1 டீஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
சோடியம் பென்சோயேட் - 1 சிட்டிகை
டொமேட்டோ ரெட் கலர் - தேவை என்றால்
தக்காளி சாஸ் / கெட்சப் செய்முறை
பெரிய வெங்காயம், பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், வெள்ளை பூண்டு, இவற்றை வேக வைத்து சாறு எடுக்கவும். தக்காளிச் சாற்றில் மூன்றில் ஒரு பங்கு சீனியை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு துணியில் மிளகாய் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி, ஏலம், பட்டை, கிராம்பு பொடி எல்லாவற்றையும் வைத்து மூட்டையாக கட்டி கொதிக்கும் தக்காளிச் சாற்றில் போடவும். தக்காளிச் சாறு மூன்றில் ஒரு பங்காக வற்றியவுடன் மசாலா மூட்டையை வெளியில் எடுத்து நன்றாகப் பிழிந்து சாற்றுடன் சேர்க்கவும். மீதி உள்ள சீனியையும் உப்பையும் சேர்த்து மறுபடியும் மூன்றில் ஒரு பாகம் வரும் வரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் சாஸில் ஒரு துளியளவு எடுத்து ஒரு பிளேட்டில் விடவும். சாஸ் ஒடாமல் ஒரு இடத்தில் நின்றால் சாஸ் தயாராகிவிட்டது என்று பொருள். இறக்கப் போகும் முன்பு வினிகரை ஊற்றி இரண்டு நிமிடங்களில் அடுப்பை விட்டு இறக்கவும். சோடியம் பென்சோயேட் கலந்து குறுகிய வாயுள்ள பாட்டில்களில் 1 இன்ச் மட்டும் விட்டு மேலே வரை ஊற்றவும் ஆறியதும் மூடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum