Top posting users this month
No user |
Similar topics
க்ரீன் புலாவ்
Page 1 of 1
க்ரீன் புலாவ்
க்ரீன் புலாவ் தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
இஞ்சி - சிறு துண்டு
வெங்காயம் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
க்ரீன் புலாவ் செய்முறை
அரிசியைக் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். புதினா, இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் முதலியவற்றை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து பின் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அரிசியைப் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து சூடாக வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum