Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மன்னார்குடி மன்னர்

Go down

மன்னார்குடி மன்னர் Empty மன்னார்குடி மன்னர்

Post by abirami Mon Apr 06, 2015 5:06 pm


ஆக.22 காலை 8-9.55 மணி மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆகஸ்ட் 22ல் மகாசம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நடப்பதை ஒட்டி, வாசகர்கள் அங்கு சென்று வருவதற்கு வசதியாக, ஒரு வாரம் முன்னதாகவே அந்தக் கோயில் குறித்த விபரங்களைத் தருகிறோம்.
தல வரலாறு: திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவர்கள் கிருஷ்ணரின் லீலைகள் பற்றி கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க துவாரகை கிளம்பினர். வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்துவிட்டதாக கூறினார். அதைக் கேட்டதும் முனிவர்கள் மயக்கமாயினர்.
நாரதர் அவர்களை எழுப்பி தேற்றினார். கிருஷ்ணரைக் காண அவரது ஆலோசனைப்படி தவமிருந்தனர். பகவானும் கிருஷ்ணராக அவர்களுக்கு காட்சி தந்தார். அவரிடம் தங்களுக்கு கிருஷ்ணலீலையைக் காட்டும்படி வேண்டினர். அவர் தனது 32 லீலைகளைக் காட்டியருளினார். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க, அவர்கள் தவமிருந்த மன்னார்குடியில் எழுந்தருளினார்.
கிருஷ்ண லீலை: தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர், கோபிரளயருக்கு முதலில் கிருஷ்ணர், தனது தந்தை வசுதேவரின் வடிவில் காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இக்கோயிலில் மூலவர் "வாசுதேவர்' என்ற பெயரிலும், உற்சவமூர்த்தி ராஜகோபால சுவாமியாகவும் காட்சி தருகிறார். காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு பூஜை செய்யப்படுகிறது. உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிற்காலத்தில் பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "மன்னார்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.
சுவாமி அமைப்பு: உற்சவர் ராஜகோபாலர் வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய "குழந்தை' அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. இடது கையில் தந்தம் இருக்கிறது. வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யம். மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் செய்யப்படுகிறது.
வெண்ணெய் கண்ணன்: பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. கிருஷ்ணருக்காக அமைந்த கோயில் என்பதால் 18க்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா நடத்தப்படுகிறது (குரு÷க்ஷத்ர யுத்தம் நடந்த நாட்கள் மற்றும் கீதையின் அத்தியாயம் 18). இவ்விழாவை, "பார் புகழும் பங்குனி பிரம்மோற்ஸவம்' என்று குறிப்பிடுகிறார்கள். இவ்விழா நடக்கும் நாட்களில் கிருஷ்ணரின் 32 லீலை அலங்காரம் செய்வது விசேஷம். 16ம் நாளில் "வெண்ணெய் தாழி' உற்சவம் நடக்கிறது. அப்போது சுவாமி தவழ்ந்த கோலத்தில், கையில் வெண்ணெய்ப்பானையுடன் வீதியுலா செல்வார்.
கோயில் சிறப்பு: செங்கமலத்தாயார் தனி சன்னதியில் காட்சி தருகிறார். இவரது அவதார நட்சத்திரமான பூசத்தன்று விசேஷ திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். தை 4ம் நாள் சுவாமி, தாயாருடன் சேர்ந்து "ஏக சிம்மாசனத்தில்' காட்சி தருகிறார். தாயார் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். திருமணம், புத்திரதோஷம் உள்ள பெண்கள் இந்த கருடனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இத்தலம் கிருஷ்ணருக்குரியது என்பதால் அவருக்கு முன்பிறந்த மாயா, "துர்க்கை' என்னும் பெயரில் அருளுகிறாள். இவள், வாசு தேவப்பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் இருக்கிறாள். ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது புத்திர பாக்கியத்திற்காக இவளுக்கு தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.
16 கோபுரங்கள்: இந்த கோயிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை. ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் தேரழகு என்பதுபோல, "மன்னார்குடி மதிலழகு' என்பது சொல் வழக்காக உள்ளது.
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 28 கி.மீ., தூரத்தில் மன்னார்குடி உள்ளது. பஸ்ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6.30- 12, மாலை 4.30- 9 மணி.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum