Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உன் வாழ்க்கை உன் கையில்

Go down

உன் வாழ்க்கை உன் கையில் Empty உன் வாழ்க்கை உன் கையில்

Post by abirami Mon Apr 06, 2015 4:33 pm


- சத்குரு ஜக்கி வாசுதேவ்
யோகமரபில் உலகைப் படைத்தவராக கடவுளைப் பார்ப்பதில்லை. பிரபஞ்சத்தின் மூலமென்று அவரைக் காட்டுவதில்லை. வாழ்வின் விதையாக இறைவனைச் சுட்டுவதில்லை. கடவுள் என்பவர் வாழ்வின் மலர்ச்சி. யோக மரபில் கடவுள் தன்மையின் குறியீடாக மலர் காட்டப்படுகிறது. ஏனெனில் ஒருவருக்கு நிகழக்கூடிய உச்சகட்ட மலர்ச்சியே கடவுள்தான்.
யோகாவைப் பொறுத்தவரை கடவள் அனைத்தையும் படைத்தவராக காட்டப்படுவதில்லை. ஏனெனில், நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதில் யோகா அக்கறை செலுத்துவதில்லை. எங்கே போகப்போகிறீர்கள் என்பதில்தான் அது அக்கறை காட்டுகிறது. எல்லோரும் கடவுளைத் தந்தையாகப் பார்க்கிறபோது, யோகா மரபு அப்படி சிந்திப்பதில்லை. மாறாக, உங்களுக்குள் உருக்கொள்ளக்கூடியதாக கடவுள்தன்மை காட்டப்படுகிறது. உங்களுக்குள் அதனை வளர்த்தால்உங்களுக்குள்ளேயேஅது உருப்பெறும்.நீங்கள் வளர்த்தெடுக்கவில்லையென்றால் உங்களுக்குள் ஒரு விதையாக மட்டும் அது நிலைத்திருக்கும். எனவே யோகக்கலையின் அறிவியலைப் பொறுத்தமட்டில் "ஆன்மிகம்' என்று நாம் அழைப்பதெல்லாம் விதையை வளர்த்தெடுத்து மலரச் செய்வதுதான்.
நீங்கள் ஆன்மிக பாதையில் நடைபோடுகிறீர்கள் என்றால் உண்மையைத் தேடுகிறீர்கள் என்றுதான் பொருள். ஆனால், என்னவிதமான உண்மையைத் தேடுகிறீர்கள் என்பது முக்கியம். கோயில், தேவாலயம், மசூதி, ஆசிரமம் என்று பலவிதமான இடங்களுக்கும் மனிதர்கள் செல்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உண்மையை எதிர்நோக்கி செல்கின்றனர். பயன்தரும் வரையில் தாங்கள் தேடுவது என்னவிதமான உண்மை என்று யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், யோகமரபில் முன்னெடுத்து செல்லப்படுவது பயன்தரக்கூடியது அல்ல. இது அனைத்தையும் தலைகீழாக திருப்பிப் போடக்கூடியது. வாழ்வில் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கான பாதை அல்ல இது. எல்லாம் அற்றுப்போகவேண்டும் என்று எண்ணுபவர்களுக்கான வழியே இது. வெல்லவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. வெல்லப்பட வேண்டும்,
சரணடைய வேண்டும் என்று யாருக்கு ஆசை? உலகியல் பாஷையில் ஒரு முட்டாளுக்குத்தான் அப்படிஆசை வரும் என்பார்கள். ஆனால், எல்லாம் அற்றுப்போக வேண்டும், சரணடைய வேண்டும் என்று ஆசைப் பட்ட "முட்டாள்களின்' மிகநீண்ட பட்டியல் நம் பாரம்பரியத்தில் உண்டு. ஆணவம் மிக்க மனிதர்களாக இல்லாமல் வெறும் மண்ணைப் போல் இந்தபூமியில் வாழ விரும்பியவர்கள் அவர்கள். உலகியல் வாழ்க்கைக்கு அவர்கள் பொருந்தமாட்டார்கள் என்று புரிந்ததால்தான், சிவன் அவர்களை அரவணைத்துக் கொண்டார். கண்மூடித்தனமான அர்ப்பணிப்பு உணர்வு காரணமாகவேஅவர்கள் கருணைக்கு ஆளானார்கள். வெட்கம், கோபம், பொறாமை, அகங்காரம் என்று எதுவுமே அவர்களிடம் இல்லாததால்தான் உச்சநிலையை எளிதில்
எட்டமுடிந்தது. ஓர் இந்தியனுக்கு முறையான வழிபாட்டு இடம்கூட அவசியம் இல்லை. கண்ணெதிரே காணும் எதனையும் அவனால் கடவுளாக்க முடியும். இது ஒர் அற்புதமான தொழில்நுட்பம். கல்லின் ஒரு பகுதியை அவன் கடவுள் என்று அறிவித்துவிட்டால் அடுத்தநாளே ஆயிரக்கணக்கானவர்கள் அந்தக்கல்லை வலம்வந்து
வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். இதில், எதைத் தொழில்நுட்பம் என்கிறேன் என்றால், ஒரு கல்லைக்கூட விழுந்து வணங்க அவன் தயாராக இருப்பதைத்தான். அளவுகடந்த அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு கல்லையும் குச்சியையும், மலரையும் விழுந்து வணங்கும் இந்த எளிய அர்ப்பணிப்பு உணர்வு என்னும் தொழில் நுட்பம் தான் இந்தியாவை எல்லாம் கடந்த நிலைக்கு எண்ணற்றவர்களை ஏற்றுமதி செய்யும்நாடாக ஆக்கியது.
இதன் விளைவாக இந்த மண்ணிலும், இந்தப் பாரம்பரியத்திலும் தன்னை உணர்ந்தவர்கள் ஏராளமாக உள்ளார்கள் என்னும் அளப்பரிய ஆசீர்வாதம் கிடைத்தது. இது உலகில் வேறெங்கும் இல்லை. ஏனென்றால், ஏதாவது ஒன்றை வணங்க வேண்டும் எனில் அதற்கென்று அவர்களுக்கு சில நிபந்தனைகள் இருந்தன. ஆனால், புழு, பூச்சியிலிருந்து மரம் மட்டை வரை எதையும் வணங்க நீங்கள் தயாராகும்போது உங்களுக்கு எந்த ஒரு எல்லையும் இல்லை. பரம்பொருளை உணர பல லட்சம் வாய்ப்புகள் உங்களுக்கு. இவற்றில் ஏதாவது ஒன்றில் உங்களுக்கான வழி திறக்கலாம். இந்தக்கதவுகளை உங்களால் தட்ட முடியாது. ஏனெனில் இந்தக்கதவுகள் திறந்தே இருக்கின்றன.
தட்டவேண்டிய தேவை இல்லாமல் திறந்தே இருந்ததால்தான் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை. மூடிவைத்திருந்தால் முட்டி மோதி இருப்பீர்கள். கண்ணெதிரெ இருந்ததையும் நீங்கள் காண மறந்ததால்தான் யோகிகள் உங்களை தலைகீழாக நிறுத்தினார்கள். ஏனென்றால் வசதிக்குறைவான நிலைகளில் உங்களால் உண்மையை உணர முடியும்.
ஒரு குறிப்பிட்ட பயிற்சியை எப்படி செய்கிறீர்கள் என்பதைவிட என்ன மனநிலையில் செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்கள் என்றால் உங்களை சற்றே உலுக்கி எழுப்ப வேண்டும். உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்ப முயலும்போது நீங்கள் பார்த்திருப்பீர்கள். சற்றே உலுக்கினால் இன்னொரு பக்கம் திரும்பி படுத்துக் கொள்வார்கள். ஜன்னலை திறந்தால் வேறொருபக்கம் திரும்பி படுப்பார்கள். அவர்களை நன்றாக உலுப்பினால்தான் எழுப்ப முடியும்.
ஒருவரை உறக்கத்திலிருந்து எழுப்ப தீவிரமான வழிகளை கையாள்வது அவருடன் உங்களுக்கு இருக்கும் உறவின் ஆழத்தைப் பொறுத்தது. அந்த உறவுஆழமாக இல்லாத பட்சத்தில் தலையில் தண்ணீரைக் கொட்டியோ, பழுக்கக் காய்ச்சிய இரும்பால் இழுத்தோ எழுப்ப முற்பட்டால் அவருடனான உறவை நீங்கள் இழந்துவிடக்கூடும். அந்த உறவு ஆழமானதாக இருந்தால் நீங்கள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள் வார்கள். துரதிருஷ்டவசமாக அத்தகைய ஆழமான உறவுகளை உருவாக்குவது இந்தக்காலங்களில் அத்தனை எளிதல்ல. பழைய பாரம்பரிய சூழலில் குருவின் வருகை நிகழும் முன்னரே அவருடனான உறவு ஆழமானதாக இருக்கும். இதனால் அவருடைய பணி மிக எளிதாக முடிந்துவிடும். அத்தகைய சூழல் இப்போது இல்லை. இந்த உறவை மெல்ல மெல்ல உருவாக்க வேண்டியிருக்கிறது. கூடுதலாக ஒரு வார்த்தை சொன்னாலும் மனிதர்கள் விலகிவிடுவார்கள்.
ஒரு முறையை பின்பற்றுவது என்று நீங்கள் முடிவு செய்தால் உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்தமுறை பயன்தரும். எல்லா நிலைகளிலும் நிபந்தனைகளையும், மாற்று வழிகளையும் உருவாக்கிக் கொண்டே போனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகக் கொடுமையானவையாக இருக்கும்.
உங்கள் மரணத்தின்பிறகும்கூட அவை உங்களைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். எனவே உங்கள் ஆன்மிகப் பாதையை ஒருவழி முறையாக கைக்கொள்ளப் போகிறீர்களா அல்லது மரணத்திற்குப் பிறகும் தொடரும் போராட்டமாக ஆக்கிக் கொள்ளப் போகிறீர்களாஎன்பது உங்களின் கைகளில்தான் இருக்கிறது.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum