Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வத்ராப் வள்ளல்

Go down

வத்ராப் வள்ளல் Empty வத்ராப் வள்ளல்

Post by abirami Mon Apr 06, 2015 4:28 pm


புதிதாக கோயில் கட்டுவதைவிட, பழமையான கோயில்களைப் பாதுகாப்பது அவசியம். நமது முன்னோர் எவ்வித இயந்திர வசதியும் இல்லாமல், மிகுந்த பாடுபட்டு கட்டியவை அவை. ஆனால், நமது அக்கறையின்மையின் காரணமாக, பல கோயில்கள் புல்பூண்டு முளைத்து இடிந்து கிடக் கின்றன. மக்களுக்கு கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தப்பகுதியின் நோக்கம். மங்கலநிகழ்ச்சிகளை தங்குதடையின்றி நடத்தி வைக்கும் அழகிய சாந்த மணவாளப் பெருமாள், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அருள்பாலிக்கிறார். இந்தக்கோயில் தற்போது மிகவும் சிதிலமடைந்துள்ளது.
தல வரலாறு: வத்திராயிருப்பு பகுதியை புராணகாலத்தில் தர்மாரண்ய ÷க்ஷத்திரம் என்று அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதி "தர்மாத்ரி' என்று குறிக்கப்படுகிறது. அர்ஜுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, இப்பகுதிமக்கள் வறட்சியால் நீரின்றி தவித்ததைக் கண்டு வருந்தினார். உடனே, தன் வில்லை எடுத்து பூமியை நோக்கி அம்பு தொடுத்தார். அந்த இடத்தில் அழகிய பொய்கை உருவானது. அப்பொய்கை அர்ஜுன பொய்கை என்றும், அங்கிருந்து உற்பத்தியான நதி ""அர்ஜுனாநதி'' என்றும் பெயர் பெற்றது. ரிஷிகளிடம் ஸ்ரீதேவியான லட்சுமி தாயார்,
""பூலோகத்தில் தவம் செய்வதற்கு சிறந்த இடம் எது?'' என்று கேட்டாள். அவர்கள் இத்தலத்தைப் பற்றி சொன்னதும், அங்கு வந்தாள். இடத்தைப் பார்த்தவுடனேயே அவள் முகம் மலர்ந்தது. "லட்சுமி முகம் மலர்ந்த இடம்' என்பதால் ""ஸ்ரீவக்தரம்''
(திருமகள் திருமுகம்) என்னும் பொருளில் இத்தலம் அழைக்கப்பட்டுவந்தது. பின்னாளில் ""ஸ்ரீ வக்த்ரபுரம்'' என்றாகி வத்திராயிருப்பு என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் இவ்வூரில் தவம் செய்து, திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
பாண்டியரின் திருப்பணிகள்: 14ம் நூற்றாண்டில் தென்காசியைத் தலைநகராக கொண்டு ஆண்ட வென்று மாலையிட்ட வீரபாண்டிய மன்னன், இக்கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தியதாக கல்வெட்டில் செய்தி இடம்பெற்றுள்ளது. அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆகியோரும் திருப்பணி செய்துள்ளனர். உச்சிக்கால நைவேத்யம் மற்றும் திருவிழாக்களுக்காக பராக்கிரம
பாண்டியன் தானமாக நிலங்கள் வழங்கியதையும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இறங்காக்கிணறு: வெளிப்பிரகாரத்தில் நக்கன் மற்றும் சொக்கன் வில்லி என்பவர்களால் வெட்டப்பட்ட கிணறு உள்ளது. இதற்குள் இறங்கினால் உயிர் போகும் என்பதால் ""இறங்காக்கிணறு'' என்று பெயர் உண்டானது. இக்கிணற்றின் அருகில் புளியமரம் ஒன்று இருந்துள்ளது. இம்மரத்திற்கு ""உறங்காப்புளி'' என்று பெயர். இம்மரத்தின் இலைகள் சூரியன் மறைந்த பின்னும் மூடாமல் இருந்ததாக கூறுகின்றனர். இப்போது அந்த மரம் இல்லை.
கோயில் அமைப்பு : பெருமாள் எதிரே கருடாழ்வார் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலவர் அழகிய சாந்த மணவாளப்பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கை கதாயுதத்தை பிடித்தநிலையிலும் உள்ளது. அர்த்தமண்டபம், மகாமண்டபம்<, ஏகாதசி மண்டபம் ஆகியவை சிதிலமடைந்து விட்டன. கொடிமரம் இருந்ததற்கான பீடம் மட்டுமே உள்ளது. பத்மாவதி தாயார் சன்னதி முற்றிலும் அழிந்த விட்டநிலையில் தாயார் அர்த்தமண்டபத்தில் வீற்றிருக்கிறார். விஷ்வக்சேனர், ஆழ்வார்கள், ராமானுஜர், சக்கரத்தாழ்வாருக்கும் சன்னதிகள் உள்ளன.
குலதெய்வம்: நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இப்பெருமாள் கோயிலில் வழிபாடு நடந்து வந்துள்ளது. கோயிலைச் சுற்றி மக்கள் குடியிருந்து வந்துள்ளனர். அர்ஜுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் தற்போதைய வத்திராயிருப்பு பகுதிக்கு குடிவந்துவிட்டனர். மணவாளப் பெருமாள் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்து வந்துள்ளார். கோயிலின் உற்சவமூர்த்திகள் இங்குள்ள சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உற்சவர் மணவாளப் பெருமாள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருவீதியுலா வருகிறார்.
விரைவில் திருப்பணி: இக்கோயிலைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் சமீபத்தில் தேவப்பிரசன்னம் பார்த்தபோது, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தால் நாட் டில் சுபிட்சம் உண்டாகும் என்றும், அழகிய சாந்த மணவாளப் பெருமாள், நம் விருப்பங்களை வள்ளலாய்இருந்து வாரி வழங்குவார் என்றும் தெரிய வந்துள்ளது.
மிகவும் சிதிலமடைந்த இக்கோயில் திருப்பணி துவங்க உள்ளது.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum