Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அன்பார்ந்த மக்களே இதோ உங்களுக்கு நடக்கவிருப்பது!

Go down

அன்பார்ந்த மக்களே இதோ உங்களுக்கு நடக்கவிருப்பது!  Empty அன்பார்ந்த மக்களே இதோ உங்களுக்கு நடக்கவிருப்பது!

Post by oviya Mon Mar 30, 2015 12:57 pm

அன்பார்ந்த ராசி நேயர்களே உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள்,
மேஷம்

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் ஜன்ம ராசியில் சுக்கிரனுடன் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

மனத்துணிச்சல் கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கணவன் மனைவி உறவுநிலை சீராகும். நண்பர்கள் உதவுவார்கள். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். அரசியல், நிர்வாகம், வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும்.

முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். இன் ஜினீயர்கள், இயந்திரப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 11-ல் சூரியனும் புதனும்,கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்ப நலம் சிறக்கும்.

அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கு தென்படும். நிர்வாகத்திறமை வெளிப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். எலெக்ட் ரானிக், கணனி துறைகள் லாபம் தரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும்.

கெட்ட எண்ணங்களுக்கும், பழக்கங்களுக்கும் இடம் தரலாகாது. தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுவது நல்லது. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். வாழ்க்கைத்துணைவருக்காகவும் மக்களுக்காகவும் செலவு செய்யவேண்டிவரும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும், 6-ல் சனியும், 10-ல் சூரியனும் புதனும் கேதுவும் 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும்.

உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கடல் வாணிபம் லாபம் தரும்.

பொதுப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். எலெக்ட் ரானிக், கணனி இனங்களால் வருவாய் கூடும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றி விருதுகளும் பட்டங்களும் பெறுவார்கள்.

வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகமாகும். சுப காரியங்கள் நிகழும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி காணலாம்,

அலைச்சலும் உழைப்பும் அதிகரித்தாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும்.

கடகம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நூதனமானவர்களின் நட்புறவைப் பெறுவீர்கள். அதனால் அனுகூலமும் உண்டாகும்.

வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இஞ்சினீயர்கள் ஏற்றம் பெறுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செயலில் வேகம் பிறக்கும். மனத்துணிச்சல் கூடும். சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். மக்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு உண்டாகும். வியாபாரிகள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்

உங்கள் ராசி அதிபதி சூரியன் 8-ல் உலவுவது சிறப்பாகாது. சனி 4-ல் உலவுவதும் குறையே. ராகு, கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இல்லாததால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

9-ல் செவ்வாயும் சுக்கிரனும் கூடியிருப்பதால் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் ஓரிரு நன்மைகள் உண்டாகும் கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். குரு வக்கிரமாக இருப்பதால் பொருள் வரவு சீராகவே இருந்துவரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

கன்னி

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 8-ல் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொதுப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஆசிரியர்களது நோக்கம் நிறைவேறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். கடல் வாணிபம் லாபம் தரும்.

ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் சூரியன், புதன், கேது ஆகியோரும் உலவுவதால் அலைச்சல் அதிகரிக்கும். கூட்டாளிகளாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு பிரச்னைகள் சூழும். வீண்வம்பு வேண்டாம்.

விளையாட்டு விநோதங்களிலும், இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பயணத்தின்போதும் பாதுகாப்பு தேவை. எதிலும் அவசரம் கூடாது. பொறுமையாக ஈடுபடுவது நல்லது.

எலெக்ட்ரானிக், கணனி இனங்களைச் சேர்ந்தவர்களுக்குத் திறமைக்குரிய பயன் கிடைத்துவரும்.

துலாம்

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் கேதுவும் 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் தொழில் நுட்பத்திறமை உண்டாகும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும், எதிரிகள் அடங்குவார்கள்.

புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசுப்பணியாளர்களது கோரிக்கைகள் சில இப்போது ஈடேறும். எலெக்ட்ரானிக், கணனி போன்ற இனங்கள் லாபம் தரும்.

பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி கான வாய்ப்புக் கூடிவரும். 7-ல் செவ்வாயும், சுக்கிரனும் 12-ல் ராகுவும் உலவுவதால் கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது.

வீண் செலவுகளைத் தவிர்க்கவும். பிறரிடம் கோபப்படாமல் இருக்கவும். குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். வாரப்பின்பகுதியில் நற்காரியங்களில் பங்கு கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

ஆதாயம் சற்று அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இப்போது நிறைவேறும்.

விருச்சிகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல், தன் சொந்த வீட்டில் உலவுவது சிறப்பாகும். குரு, ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். செயலில் வேகம் பிறக்கும்.

வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். ஜாதக பலமும் இருப்பவர்களுக்கு வழக்கில் வெற்றியும் கிடைக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும்.

புதிய வாய்ப்புக்களும் கூடிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வாரப்பின்பகுதியில் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மக்களாலும் தந்தையாலும் நலம் உண்டாகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உழைப்பு வீண்போகாது.

புதியவர்களின் தொடர்பு கிட்டும் அதனால் அனுகூலமும் உண்டாகும். சனி ஜன்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் 6-ல் உலவுவதாலும் பெண்களால் பிரச்னைகள் சூழும்.

வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். கேளிக்கை, உல்லாசங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தனுசு

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 5-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். மன உற்சாகம் கூடும். செயலில் வேகம் கூடும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.

மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.

வெளிநாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். மாதர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது திறமை வெளிப்படும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். பண நடமாட்டம் சற்று அதிகமாகும். குடும்பத்தில் அமைதி காண வழிபிறக்கும்.

பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். தாய் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. எலெக்ட் ரானிக், கணனி போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள்.

மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் கேதுவும் 4-ல் சுக்கிரனும் 7-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவதால் அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.

முக்கியஸ்தர்களது சந்திப்பு பயன்படும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். கலைஞர்கள், மாதர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு, கச்சாப்பொருட்கள் ஆகியவை மூலம் ஆதாயம் கிடைத்துவரும்.

புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். மார்பு, கை, தோள் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்பட்டு விலகும்.

கும்பம்

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். 2-ல் புதனும் 3-ல் உலவும் செவ்வாயும் சுக்கிரனும் நலம் புரிவார்கள். குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் அனுகூலம் உண்டாகும்.

உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். பண வரவு சற்று அதிகரிக்கும். மனத்தில் துணிவு பிறக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

போட்டிகளிலும் பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நிலை உயரும்.

கலைஞர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். சுப காரியங்களில் பங்கு கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். 2-ல் சூரியன், கேது ஆகியோரும் 8-ல் ராகுவும் உலவுவதால் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண்வம்பு வேண்டாம்.

மீனம்

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 5-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். முன்னேற்றத்துக்கான தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும்.

சாதுக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். பண நடமாட்டம் திருப்தி தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். அறிவாற்றல் பளிச்சிடும். எதிரிகள் அடங்குவார்கள்.

உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஜன்ம ராசியில் சூரியனும் புதனும் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால் தலை, கண், நரம்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும்.

உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உழைப்பு அதிகரிக்கும்.

அதற்கான முழுமையான பயன் கிடைக்காமல் போகும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum