Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லிப்டில் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்த பெண்: துபாயில் கைது

Go down

லிப்டில் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்த பெண்: துபாயில் கைது Empty லிப்டில் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்த பெண்: துபாயில் கைது

Post by oviya Wed Feb 25, 2015 1:13 pm

துபாயில் இந்திய வாலிபர் ஒருவரை லிப்ட்டில் வைத்து பலாத்காரம் செய்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
துபாயில் வேலை செய்துவரும் இந்திய வாலிபர் ஒருவர், லிப்ட்டில் தன்னை ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்து பணத்தை பறித்ததாக புகார் அளித்தார்.

இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அந்த வாலிபர், கடந்த டிசம்பர் மாதம் 17-ம் திகதி நான் புர் துபாய் பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாக லிப்ட்டினுள் ஏறி நான்காவது மாடிக்கு செல்லும் பொத்தானை அழுத்தினேன்.

அப்போது அந்தப் பெண், தனது பர்தாவை நீக்கி விட்டு என்னைப் பார்த்து, எப்படி இருக்கீங்க? என்று கேட்டாள்.

மேலும் என்னை நெருங்கி வந்து கட்டிப்பிடித்தபோது நான்காவது மாடியை லிப்ட் அடைந்து விட்டது.

அப்போது லிப்டை விட்டு நான் வெளியே செல்ல முயன்றபோது எனது சட்டையை பிடித்து உள்ளே இழுத்து, ஏழாவது மாடிக்கு செல்ல லிப்ட்டின் பொத்தானை அழுத்தினாள்.

இதையடுத்து என்னை பலவந்தமாக கட்டியணைத்து முத்தமிட்டபடி என் அந்தரங்க உறுப்பை தொட்டாள். அதற்குள் லிப்ட் 7-வது மாடியை அடைந்ததால், மீண்டும் நான்காவது மாடிக்கு செல்லும் பொத்தானை அழுத்தி என் உடலை ஆக்கிரமித்தாள்.

பின்னர் நான்காவது மாடியில் லிப்ட் நின்றபோது அவளிடம் இருந்து விடுபட்டு தப்பி ஓடினேன்.

அப்போது என் பின் பாக்கெட்டில் இருந்த பர்சை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 4500 திர்ஹம், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 72 ஆயிரத்தை காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜோர்டானியப் பெண் இதுபற்றி கூறுகையில், நான் கடவுளுக்கு பயந்து நடப்பவள் என்றும் எந்த தவறையும் நான் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சி.சி.டி.வி கமெராவில், அந்த வாலிபர் லிப்ட்டினுள் ஏறுவதற்கு முன்னதாக அந்தப் பெண் உள்ளே இருந்ததும், வெளியே தப்பித்து ஓடிவர முயற்சித்த அவரை அந்தப் பெண் லிப்ட்டினுள் இழுத்ததும் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த வீடியோ பதிவு ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் மறுவிசாரணை வரும் 8-ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum